IPL 2026: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

PBKS vs RR: ஐபிஎல் 2026 தொடரின் 40வது போட்டி முல்லன்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்யலாம். ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை இங்கு மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன, அவற்றில் இரண்டில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2026: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

பஞ்சாப் - ராஜஸ்தான்

Published: 

28 Apr 2026 08:00 AM

 IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் (IPL 2026) 40வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 28ம் தேதி  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை அன்று முல்லன்பூரில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். கடந்த ஐபிஎல் சீசனில், இந்த இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடின, அதில் ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும், மற்றொன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசிப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. அதில், 219 ரன்களைப் பாதுகாத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் நெஹால் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. கடினமாகும் பயணம்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!

புதிய சண்டிகர் பிசிஏ ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2026 தொடரின் 40வது போட்டி முல்லன்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்யலாம். ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை இங்கு மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன, அவற்றில் இரண்டில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 254 ரன்களைப் பாதுகாத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

PBKS மற்றும் RR அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மொத்தமாக 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைசாக் விஜய் குமார். தாக்க வீரர்: நேஹால் வதேரா.

ALSO READ: களத்தில் நடுவருடன் வாக்குவாதம்.. அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரவீந்திர ஜடேஜா, டோனோவன் ஃபெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, துஷார் தேஷ்பாண்டே. தாக்க வீரர்: ரவி பிஷ்னோய்.

PBKS vs RR இன்றைய போட்டி கணிப்பு:

ஐபிஎல் 2026 தொடரின் 40வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?