AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!

இதையடுத்தது புதுச்சேரியில் இருந்து 4½ லிட்டர் வரை மதுவாங்கிக் வரலாம் என்ற தகவல் பரவியது. சிலர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தி வந்தனர். அவர்களை பிடித்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பற்றி கடலூர் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து 4.5  லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!
புதுச்சேரி மதுபானங்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Apr 2026 10:20 AM IST

புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் வரை மதுபாட்டில்கள் எடுத்து வர அனுமதி உண்டா? என்பதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்கள் விலை குறைவு என்பதால், மதுப்பிரியர்கள் அங்கு சென்று மது குடித்து விட்டு வருகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். அவ்வாறு மதுபாட்டில்களை கடத்தி வருவோர் மீது கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..

மதுபாட்டில்கள் பறிமுதல்:

இந்தநிலையில், விருத்தாசலம் அருகே காட்டுப்பரூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லரசு என்பவர், புதுச்சேரியில் இருந்து 750 மி.லி. லிட்டர் 2 பாட்டில், 180 மி.லி. பாட்டில் என்று மொத்தம் 3 பாட்டில்களில், 1.680 மி.லி. லிட்டர் அளவில் மதுவை எடுத்து வந்தார். இந்த மதுபாட்டில்களுடன் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக வந்தார். அப்போது அங்கிருந்த கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்:

இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மது 4.5 லிட்டர் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆனால் மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி லிட்டர் தான் மது வைத்துள்ளார் என்று கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

காட்டுத்தீயாக பரவிய தகவல்:

இதையடுத்தது புதுச்சேரியில் இருந்து 4½ லிட்டர் வரை மதுவாங்கிக் வரலாம் என்ற தகவல் பரவியது. சிலர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தி வந்தனர். அவர்களை பிடித்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பற்றி கடலூர் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு, தனிப்பட்ட வழக்கில் வேறு ஒரு தீர்ப்பை காரணம் காட்டி இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இது பற்றி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இந்த விதிமுறை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கிய மதுவுக்கு மட்டுமே பொருந்தும்.

இதையும் படிக்க: “தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!

வழக்கு தொடரப்படும்:

புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபாட்டில் வாங்கி வந்தாலும் வழக்கு தொடரப்படும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து மதுப்பிரியர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

Follow Us