IPL 2026: தொடர்ந்து சொதப்பும் சூர்யா, திலக்.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்!

Coach Mahela Jayawardene On MI Form: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றமளிக்கும் செயல்பாடு குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியது.

IPL 2026: தொடர்ந்து சொதப்பும் சூர்யா, திலக்.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்!

மும்பை இந்தியன்ஸ்

Published: 

03 May 2026 14:47 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசனின் (IPL 2026) 44வது போட்டியில் நேற்று அதாவது 2026 மே 3ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றமளிக்கும் செயல்பாடு குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே ஒரு சில வெளிப்படையான விளக்கத்தை அளித்தார். இதையடுத்து, அவர் என்ன சொன்னார் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கே செய்த சம்பவம்.. புள்ளி பட்டியலில் திணறும் மும்பை.. லேட்டஸ்ட் அப்டேட்!

மஹேல ஜெயவர்தனே விளக்கம்:

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே இதுகுறித்து பேசியதாவது, “ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் செயல்திறன் மோசமடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினால், தங்களது இயல்பான ஆட்டத்திறனை கண்டறிவார்கள் என்று நான் நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் அவர் முழுமையாகத் தயாராக இருக்கிறார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் இந்த சீசனில் அவர் பவுண்டரி கோட்டில் கேட்ச் ஆனதால், அவருடைய சில ஷாட்கள் வெற்றி பெறவில்லை. சூர்யகுமார் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப சிறிது காலம் ஆகும்.” என்றார்.

திலக் மற்றும் பும்ரா எப்படி..?

தொடர்ந்து ஜெயவர்தனே, “திலக் தனக்கு வழங்கப்படும் பொறுப்புகளை இன்னும் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு வருகிறார்.. பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் அந்தச் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே சிந்திப்பது போன்ற திறன்களை திலக் அனுபவத்தின் மூலம் வளர்த்துக் கொள்வார். ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். அதேபோல், பும்ரா மட்டுமே குறிவைக்கப்படுவது ஏன்..? இது அனைத்து பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சி. அனைவரும் ஒன்றிணைந்து விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ​​பும்ரா இன்னும் ஆக்ரோஷமாக விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

ALSO READ: அரைசதம் அடித்து மும்பையை முடித்த ருதுராஜ்.. 4வது வெற்றியை பதிவு செய்த சென்னை!

மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்திறன்:

ஐபிஎல் 2026 சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 7 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன்படி, -0.803 என்ற நிகர ரன் ரேட்டுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளிகள் அட்டவணையில் 9வது இடத்தில் உள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..