IPL 2026: மீண்டும் ரோஹித் இல்லாத போட்டி.. மும்பை அணியின் பிளேயிங் லெவன் இதுதான்..!

MI vs SRH Toss Update: மும்பை ரசிகர்கள் இன்று ஒரு பெரிய வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், ரோஹித் ஷர்மாவின் வருகையை மும்பை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரோஹித் ஷர்மா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் நான்காவது தொடர்ச்சியான போட்டி இதுவாகும்.

IPL 2026: மீண்டும் ரோஹித் இல்லாத போட்டி.. மும்பை அணியின் பிளேயிங் லெவன் இதுதான்..!

ரோஹித் சர்மா

Published: 

29 Apr 2026 19:31 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்லார். பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதைப் பொறுத்தவரை, இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக களமிறங்கியுள்ளார். இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுள்ளது.

ALSO READ: ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் மும்பை.. தோற்றால் பிளே ஆஃப்பில் வெளியேறுமா..?

ரோஹித் சர்மா விளையாடுவாரா..?

இந்தப் போட்டிக்கான மும்பையின் ஆடும் லெவனில் ரோஹித் ஷர்மாவும் இடம்பெறவில்லை. டாஸின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் அணிக்குத் திரும்ப இன்னும் சில போட்டிகள் ஆகலாம் என்று தெரிவித்தார். மேலும், மும்பை அணி தனது ஆடும் லெவனில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதற்கிடையில், ஹைதராபாத் அணியும் தனது ஆடும் லெவனில் மாற்றங்களைச் செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸின் கடந்த மூன்று போட்டிகளில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியின் போது அவருக்குக் காயம் ஏற்பட்டது, அதன் பிறகு, ரோஹித் சர்மா விளையாடவில்லை.

மும்பை ரசிகர்கள் இன்று ஒரு பெரிய வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், ரோஹித் ஷர்மாவின் வருகையை மும்பை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரோஹித் ஷர்மா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் நான்காவது தொடர்ச்சியான போட்டி இதுவாகும்.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, 2 போட்டிகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இளம் வீரர் டேனிஷ் மாலேவரை தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி 3 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் ஒவ்வொரு தோல்வியுடனும் அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

மும்பைக்கு முன்னால் பெரிய பிரச்சனை:

மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சிரமங்களைச் சந்தித்து வருகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மோசமான ஃபார்மில் உள்ளனர். மேலும் பந்துவீச்சும் சிறப்பாகச் செயல்படவில்லை. மும்பை அணி தனது 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, தற்போது புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 14 புள்ளிகளை எட்டுவதற்கு, மும்பை இந்தியன்ஸ் தனது மீதமுள்ள 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும்.

ALSO READ: சிஎஸ்கே போட்டியை காண ஃப்ரீ.. சென்னை மெட்ரோவில் சூப்பர் பயண திட்டம்!

இரு அணிகளின் விளையாடும் பிளேயிங் லெவன்:

மும்பை இந்தியன்ஸ்:

ரியான் ரிகல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராபின் மின்ஸ், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஏ.எம். கசன்ஃபர், அஸ்வினி குமார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷ் துபே, ஷகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..