AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கொல்கத்தா – ஹைதராபாத் இன்று மோதல்.. யார் வெற்றி பெறுவார்கள்?

KKR vs SRH Head to Head: ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 20 போட்டிகளில் கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் சம அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதாவது, கொல்கத்தாவும், ஹைதராபாத் அணியும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

IPL 2026: கொல்கத்தா – ஹைதராபாத் இன்று மோதல்.. யார் வெற்றி பெறுவார்கள்?
கொல்கத்தா Vs ஹைதராபாத்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Apr 2026 17:01 PM IST

ஐபிஎல் 2026 தொடரின் (IPL 2026) 6வது லீக் போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 2ம் தேதி ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (KKR vs SRH) அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இது அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி, இரண்டு அணிகளுமே தோல்வியடைந்துள்ளன. எனவே, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பார்ப்போம்.

ALSO READ: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 20 போட்டிகளில் கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் சம அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதாவது, கொல்கத்தாவும், ஹைதராபாத் அணியும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தா அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுகிறது என்பதால், கொல்கத்தா அணிக்கே சாதகம் இருப்பதாகத் தெரிகிறது.

தலா ஒரு போட்டியில் வெற்றி:

கடந்த 2025 ஐபிஎல் சீசனில், இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதின. ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மற்றொன்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. கடந்த சீசனின் அடிப்படையில், இரு அணிகளும் ஒன்றுக்கொன்று கடுமையான போட்டியை அளிக்கும் என்பது தெரிகிறது. அதன்படி, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முழு விவரம்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, பிளஸ்ஸிங் முசரபானி, மனிஷ் பாண்டே, சத்ஜாப் டி பவல், சதிக்மான் டி பவல், தஹியா, நவ்தீப் சைனி, ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், சர்தக் ரஞ்சன், பிரசாந்த் சோலங்கி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், தக்ஷ் கம்ரா.

ALSO READ: பரிதவித்த ரிஷப் பண்ட்.. கண்டித்தாரா சஞ்சீவ் கோயங்கா..? வைரலாகும் வீடியோ!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழு விவரம்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் (வி.கே./கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், டேவிட் பெய்ன், ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டோன், ஸ்மரான் ரவிச்சந்திரன், சக்ரன் ரவிச்சந்திரன், சக்ரன் ரவிச்சந்திரன் கமிந்து மெண்டிஸ், பிரைடன் கார்ஸ், பிரஃபுல் ஹிங்கே, கிரேன்ஸ் ஃபுலெட்ரா, ஓம்கார் தர்மலே, அமித் குமார்.

Follow Us