IPL 2026: ரோஹித்தின் அதிரடி தொடருமா..? பேட்டிங் செய்ய முதலில் வரும் மும்பை..

DC vs MI Toss Update: ஐபிஎல் 2026 சீசனின் 8வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 3.30 மணிக்கு மோதுகிறது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்த அழைத்தது. 

IPL 2026: ரோஹித்தின் அதிரடி தொடருமா..? பேட்டிங் செய்ய முதலில் வரும் மும்பை..

ரோஹித் சர்மா Vs அக்ஸர் படேல்

Updated On: 

04 Apr 2026 15:28 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 8வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 3.30 மணிக்கு மோதுகிறது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்த அழைத்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேலும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் தலைமை தாங்குவார்கள். டெல்லி அணி, தங்களது முதல் போட்டியிலேயே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அவர்களின் சொந்த மைதானமான ஏகானா ஸ்டேடியத்தில் வீழ்த்தி, தங்களது சீசனை வலுவாகத் தொடங்கியது. அக்சர் படேல் தலைமையிலான அந்த அணி, சிறப்பாகப் பந்துவீசியது. மறுபுறம், வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கலக்கியது. கொல்கத்தாவுக்கு எதிராக 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பை அணிக்கு, ரியான் ரிகல்டனின் 81 ரன்கள் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான 78 ரன்கள் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்றது.

ALSO READ: 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வி.. மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே!

பிட்ச் அறிக்கை:

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் 2026 போட்டி, அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இங்குள்ள பிட்ச் அதன் நல்ல பவுன்ஸ் மற்றும் சிறிய பவுண்டரிகளால் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக உள்ளது. இந்த ஆடுகளம் பொதுவாக அதிரடியாக விளையாடும் வீரர்களுக்குச் சாதகமாக இருக்கும். மேலும் பனிப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அணிகள் பெரும்பாலும் இலக்குகளைத் துரத்திப் பிடிக்கவே விரும்புகின்றன. இருப்பினும், போட்டி பகல் நேரத்தில் நடைபெறுவதால், பனிப்பொழிவின் தாக்கம் பெரிதாக இருக்காது.

ALSO READ: சென்னைக்கு மீண்டும் சோதனை.. பதறாமல் வெற்றியை பதித்த பஞ்சாப்!

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

டெல்லி கேபிடல்ஸ்:

கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்),
பதும் நிஸ்ஸங்க,
நிதிஷ் ராணா,
அக்சர் படேல் (சி),
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,
டேவிட் மில்லர்,
விப்ராஜ் நிகம்,
லுங்கி என்கிடி,
குல்தீப் யாதவ்,
டி நடராஜன்,
முகேஷ் குமார்

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா,
ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பட்),
திலக் வர்மா,
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்),
நமன் திர்,
ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்,
மிட்செல் சான்ட்னர்,
கார்பின் போஷ்,
ஷர்துல் தாக்கூர்,
தீபக் சாஹர்,
ஜஸ்பிரித் பும்ரா

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.