IPL 2026: எம்.எஸ்.தோனி எங்கே..? டாஸின்போது எழுந்த கேள்வி.. ருதுராஜ் சூசக பதில்!

MS Dhoni: ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, கால் தசைப்பிடிப்பு காரணமாக எம்.எஸ்.தோனி குறிப்பிட்ட வாரத்திற்கு விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும், எம்.எஸ்.தோனி பயிற்சி செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவந்துள்ள நிலையில், தோனி எப்போது திரும்புவார் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

IPL 2026: எம்.எஸ்.தோனி எங்கே..? டாஸின்போது எழுந்த கேள்வி.. ருதுராஜ் சூசக பதில்!

எம்.எஸ்.தோனி - ருதுராஜ் கெய்க்வாட்

Published: 

12 Apr 2026 14:45 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) தனது முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 4வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை முதல் வெற்றியை பதிவு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தபோது எம்.எஸ்.தோனி எப்போது விளையாடுவார் என்று கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது. இருப்பினும், சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியிலும் கூட, எம்.எஸ்.தோனியை காண முடியவில்லை என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். முன்னதாக, சிஎஸ்கே அணி தனது வெளியூர் போட்டிகளில் விளையாடுவதற்கு சென்றபோது கூட, எம்.எஸ்.தோனி அணியுடன் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: டெல்லியை ஓடவிட்ட ஓவர்டன்.. ஐபிஎல் 2026ல் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை!

எம்.எஸ்.தோனி எங்கே..?

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, கால் தசைப்பிடிப்பு காரணமாக எம்.எஸ்.தோனி குறிப்பிட்ட வாரத்திற்கு விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும், எம்.எஸ்.தோனி பயிற்சி செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவந்துள்ள நிலையில், தோனி எப்போது திரும்புவார் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. நேற்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் டாஸின்போது, வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம், “எம்.எஸ்.தோனி எங்கே?” என்று கேட்டார்.

ருதுராஜ் கெய்க்வாட் பதில்..

இதுகுறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “எம்.எஸ். தோனியைப் பற்றிக் கேட்பவர்களுக்கு, அவர் ஹோட்டலில் இருந்து எங்களைப் பார்த்து ஆதரவளித்து வருகிறார். ஆனால் ஆம், மிக விரைவில் நீங்கள் அவரை ஸ்டேடியத்தில் காணலாம்” என்று தெரிவித்தார்.

ALSO READ: கிளவுஸ் சர்ச்சை.. டெல்லியின் தோல்விக்கு நான்காவது நடுவர் காரணமா?

ஐபிஎல் 2026 சீசனில் முதல் வெற்றி:

ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். ஆயுஷ் மத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து முக்கியமான பங்களிப்பை வழங்கினார். இலக்கைத் துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?