“60 வயது வரை விளையாடுவேன்..!” சிவகார்த்திகேயனின் கோரிக்கைக்கு தோனி கொடுத்த மாஸ் பதில்.. வைரல் வீடியோ!!

MS Dhoni & Sivakarthikeyan in CSK ROAR 2026: தோனியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், மேடையில் பேசுகையில், "தயவுசெய்து ஓய்வு முடிவை எடுக்காதீர்கள். மஞ்சள் நிற ஜெர்சியில் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். உங்களை இன்னும் பல ஆண்டுகள் களத்தில் பார்க்க விரும்புகிறோம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

60 வயது வரை விளையாடுவேன்..! சிவகார்த்திகேயனின் கோரிக்கைக்கு தோனி கொடுத்த மாஸ் பதில்.. வைரல் வீடியோ!!

எம்.எஸ்.தோனி, சிவகார்த்திகேயன்,

Updated On: 

23 Mar 2026 11:55 AM

 IST

சென்னை, மார்ச் 23: ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே (CSK) ரசிகர்களுக்கான ‘Roar 26’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி இடையிலான சுவாரஸ்யமான உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று (மார்ச் 22, 2026) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது ரசிகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் போன்ற முன்னாள் வீரர்களுடன், தற்போதைய வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: IPL 2026: பயிற்சியின்போது கால் வலி.. நடப்பதில் சிரமம்.. எம்.எஸ்.தோனி முழுமையாக விளையாடுவாரா?

சிவகார்த்திகேயனின் வேண்டுகோள்:

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், மேடையில் தோனியுடன் உரையாடினார். தோனியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், மேடையில் பேசுகையில், “தயவுசெய்து ஓய்வு முடிவை எடுக்காதீர்கள். மஞ்சள் நிற ஜெர்சியில் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். உங்களை இன்னும் பல ஆண்டுகள் களத்தில் பார்க்க விரும்புகிறோம்” என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் “தோனி.. தோனி..” என விண்ணதிர முழக்கமிட்டனர்.

தோனியின் கலகலப்பான பதில்:

சிவகார்த்திகேயனின் கோரிக்கைக்கு நகைச்சுவையாகப் பதிலளித்த தோனி, “இந்த வயதில் பிட்டாக (Fitness) இருப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் 60 வயது வரை விளையாட நான் முயற்சி செய்கிறேன் (I can try)” என்று அவர் கூறினார். தோனி தனது 44 வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடத் தயாராகி வருவதால், அவரது இந்தப் பதில் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026-ல் தோனியின் பங்கு:

தற்போது 44 வயதாகும் தோனி, தனது 19-வது ஐபிஎல் பருவத்தில் விளையாட உள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியபடி, 2026 சீசன் முழுவதிலும் தோனி அணியுடன் இருப்பார். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி உருமாறி வரும் நிலையில், தோனியின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

மேலும் இந்த விழாவில், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மத்ரே போன்ற நட்சத்திர வீரர்களை தோனி கௌரவித்தார். சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் சிஎஸ்கே-வின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ (Hall of Fame) பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டனர்.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..