IPL 2026: முகுல் சௌத்ரியிடம் ஜாக்கிரதை.. அன்றே எதிரணியை எச்சரித்த அர்ஜுன் டெண்டுல்கர்!

Mukul Choudhary: ஐபிஎல் 2026 சீசனில் முகுல் சௌத்ரி எதிர்பார்த்தபடியே சிறப்பாகச் செயல்பட்டு, அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஸ்கொயர் லெக் மற்றும் ஃபைன் லெக் திசைகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். மேலும், கவர்-பாயிண்ட் திசையில் ஒரு சிக்ஸரையும் அடித்தார். இது பந்துவீச்சாளர்களையே ஆச்சரியப்படுத்தியது.

IPL 2026: முகுல் சௌத்ரியிடம் ஜாக்கிரதை.. அன்றே எதிரணியை எச்சரித்த அர்ஜுன் டெண்டுல்கர்!

முகுல் சௌத்ரி - அர்ஜுன் டெண்டுல்கர்

Published: 

10 Apr 2026 17:18 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) விறுவிறுப்பு ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக ஏதோ ஒன்று நடக்கிறது. போட்டியை வெல்வதற்கு யாரோ ஒருவர் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். அதிகம் அறியப்படாத சில முகங்கள் போட்டியை வெல்வது, எதிர்கால இந்திய அணிக்கு சாதகமாக அமைகிறது. தற்போது முகுல் சௌத்ரியை (Mukul Choudhary) பற்றி அதுபோன்ற ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. முகுல் சௌத்ரி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை போட்டியில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளின் உதவியுடன் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். ஆனால், ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே அர்ஜுன் டெண்டுல்கர் ஏற்கனவே முகுல் சௌத்ரி குறித்து எதிரணிகளை எச்சரித்திருந்தார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே! இதுதான் கேப்டன்ஷியா..? ருதுராஜை சாடிய பத்ரிநாத், பாலாஜி!

அன்றே எச்சரித்த அர்ஜுன் டெண்டுல்கர்:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான முகுல் சௌத்ரி, கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று அதாவது 2026 ஏப்ரல் 10ம் தேதி செய்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அவரைப் பற்றி முன்பே சில வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தார். யூடியூபர் சுபங்கர் மிஸ்ராவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அர்ஜுன் டெண்டுல்கர், ”முகுல் சௌத்ரி சிக்ஸர்களை மிக நன்றாக அடிக்கிறார். பயிற்சிப் போட்டியில் அவர் அடித்த சிக்ஸர்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஸ்கொயர் லெக், ஓவர் பாயிண்ட், பந்துவீச்சாளரின் தலைக்கு மேல், அப்பர் கட் என எல்லா இடங்களிலும் சிக்ஸர் அடிக்கும் சக்தி அவரிடம் உள்ளது. அவரது பேட்டிங் என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தற்போதைய நிலையை கருத்தில் கொள்ளும்போது, ​​அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினமாகத் தெரிகிறது. ஏனெனில், அந்த அணியில் அவரை விட சிறந்த பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் நிறைய பேர் உள்ளனர். இருப்பினும், பயிற்சியின்போது அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார்.

ALSO READ: தந்தையின் கனவு.. பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டர்.. முகுல் சௌத்ரியின் பயணம்..!

முகுல் சௌத்ரியின் ஏல விலை என்ன..?

ஐபிஎல் 2026 சீசனில் முகுல் சௌத்ரி எதிர்பார்த்தபடியே சிறப்பாகச் செயல்பட்டு, அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஸ்கொயர் லெக் மற்றும் ஃபைன் லெக் திசைகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். மேலும், கவர்-பாயிண்ட் திசையில் ஒரு சிக்ஸரையும் அடித்தார். இது பந்துவீச்சாளர்களையே ஆச்சரியப்படுத்தியது. ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு அவரது பலம் முன்பே தெரிந்திருந்தது. எனவே, அவர்கள் ஏலத்தில் முகுல் சௌத்ரியை 2.60 கோடி ரூபாய் செலவழித்து தங்கள் அணிக்கு வாங்கினர். இப்போது அனைவரின் பார்வையும் இந்த சீசனில் முகுல் சௌத்ரியின் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?