IPL 2026: புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்த கொல்கத்தா அணி.. களமிறங்கும் அபிஷேக் நாயர்!
KKR's Head Coach Abhishek Nayar: 42 வயதான அபிஷேக் நாயர் தனது தனித்துவமான பயிற்சி பாணிக்கு பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் நாயர் கே.கே.ஆர் நிர்வாகத்தில் இடம்பெறவில்லை என்றாலும், ஐபிஎல் 2025 இன் போது இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார்.
ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் இன்று அதாவது 2025 அக்டோபர் 30ம் தேதி நியமிக்கப்பட்டார். அபிஷேக் நாயர் (Abhishek Nayar) முன்னதாக, கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் உதவி பயிற்சியாளராக இருந்தார். இதையடுத்து, கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட்த்துக்கு பதிலாக இனி அபிஷேக் சர்மா செயல்படுவார்கள். 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு., சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, 5 ஆண்டு கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக இருந்த அபிஷேக் சர்மா தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ALSO READ: சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக தோனி மாற்றுவாரா? ஒப்பந்தம் குறித்த முக்கிய அப்டேட்!




அபிஷேக் நாயரின் பயிற்சி அனுபவம்:
Abhishek Nayar will replace Chandrakant Pandit as KKR’s head coach ahead of IPL 2026 pic.twitter.com/nCG0ox4oUo
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 30, 2025
42 வயதான அபிஷேக் நாயர் தனது தனித்துவமான பயிற்சி பாணிக்கு பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் நாயர் கே.கே.ஆர் நிர்வாகத்தில் இடம்பெறவில்லை என்றாலும், ஐபிஎல் 2025 இன் போது இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன்பு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் அபிஷேக் நாயர் பயிற்சி அளித்தார். மேலும், கடந்த சில மாதங்களாக கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் அபிஷேக் நாயர் பயிற்சி அளித்து வந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி குழுவில் நீண்ட காலம் இடம் பிடித்துள்ள அபிஷேக் நாயர் பயிற்சியின் கீழ், ரிங்கு சிங், ஹர்சித் ராணா போன்ற இளம் வீரர்களை வளர்த்தெடுத்தார். 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக இருந்து விலகிய பிறகு, அபிஷேக் நாயர் WPL 2025 இல் UP வாரியர்ஸின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இருப்பினும், இந்த சீசனில் UP வாரியர்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தை பிடித்தது.
ALSO READ: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் 2025 சீசனில் சொதப்பிய கேகேஆர்:
ஐபிஎல் 2024 சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது, கேகேஆர் அணியின் வழிகாட்டியாக கவுதம் கம்பீர் இருந்தார். அதேநேரத்தில், ஐபிஎல் 2025 சீசனின்போது கேகேஆர் அணிக்கு கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும், பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்ட்டிம் செயல்பட்டனர். இருப்பினும், இந்த ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 போட்டிகளில் ஐந்து வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தனர். இதனால், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை.