IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்க முடியவில்லை.. படைக்கப்பட்ட 5 சாதனைகள்..!

IPL Unbreakable Record: ஐபிஎல்-இல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையை வைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். 2013ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது, ​​புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் விளாசினார்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்க முடியவில்லை.. படைக்கப்பட்ட 5 சாதனைகள்..!

ஐபிஎல்லில் முறியடிக்க முடியாத சாதனைகள்

Published: 

21 Mar 2026 18:12 PM

 IST

ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகப்பெரிய டி20 லீக்களில் ஒன்றான ஐபிஎல்லில் (IPL 2026) பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் பல பழைய சாதனைகளும் முறியடிக்கப்பட்டாலும்,  சில சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன. ஐபிஎல் 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக முறியடிப்பதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படும் 5 முக்கிய சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்.. டாப் 2 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி!

கிறிஸ் கெய்லின் ஆட்டமிழக்காத 175 ரன்கள்:

ஐபிஎல்-இல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையை வைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். 2013ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது, ​​புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் விளாசினார். அந்த இன்னிங்ஸின்போது கெய்ல் 17 சிக்ஸர்களையும் 13 பவுண்டரிகளையும் தெறிக்கவிட்டிருந்தார். இந்த சாதனையை, இன்றுவரை எந்த பேட்ஸ்மேனும் நெருங்கக்கூட முடியவில்லை.

விராட் கோலியின் 900 ரன்கள்:

2016 ஐபிஎல் சீசன் முழுவதும் விராட் கோலிக்குச் சொந்தமானது என்றே சொல்லலாம். 2016ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விராட் கோலி மொத்தமாக 16 இன்னிங்ஸ்களில் 81.08 சராசரி மற்றும் 4 சதங்களுடன் 973 ரன்கள் எடுத்தார். இன்றுவரை, எந்தவொரு பேட்ஸ்மேனும் இந்த எண்ணிக்கையை நெருங்கவில்லை. கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சுப்மன் கில் 890 ரன்களும், ஜோஸ் பட்லர் 863 ரன்களும் எடுத்திருந்தனர். இருப்பினும், 900 ரன்கள் என்ற இலக்கைக் கடப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

அல்சாரி ஜோசப்பின் அறிமுகப் பந்துவீச்சு:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், கடந்த 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்களில் வெறும் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு, 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சோஹைல் தன்வீர் இந்தச் சாதனையை கடந்த 2008ம் ஆண்டு படைத்திருந்தார்.

கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் வைத்த சாதனையை விராட் கோலியும் ஏபி டி வில்லியர்ஸும் படைத்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு மே 14ம் தேதி எம்.சின்னசாமி மைதானத்தில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக கோலி மற்றும் டி வில்லியர்ஸ் 229 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தப் போட்டியில், டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 129 ரன்களும், கோலி 55 பந்துகளில் 109 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக, ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது.

ALSO READ: இனி ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக்கூடாது… ஆர்சிபி அணியை மோட்டிவேட் செய்த விராட் கோலி!

30 பந்துகளில் அதிவேக சதம்:

கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். அந்த போட்டியில் கெய்ல் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல்லில் இன்றும் இந்தச் சாதனை நிலைத்து நிற்கிறது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்