PBKS vs DC: கடைசி வரை த்ரில்! பஞ்சாப் கிங்ஸை பதறவைத்து டெல்லி கேபிடல்ஸ் வெற்றி..!

Delhi Capitals vs Punjab Kings: ஐபிஎல் 2025 சீசனின் 66வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 202 ரன்கள் எடுத்தது. டெல்லி, கருண் நாயர் (44) மற்றும் சமீர் ரிஸ்வி (58) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலக்கை எளிதாக எட்டியது. முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளுடன் டெல்லியின் வெற்றிக்கு பங்களித்தார்.

PBKS vs DC: கடைசி வரை த்ரில்! பஞ்சாப் கிங்ஸை பதறவைத்து டெல்லி கேபிடல்ஸ் வெற்றி..!

பஞ்சாப் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்

Published: 

25 May 2025 00:01 AM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் 66வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 24ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த தோல்வி முதல் 2 இடங்களை பிடிப்பதற்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் நம்பிக்கை உடைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 2026 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய டெல்லி அணி கடைசி ஓவர் வரை விரட்டி சென்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

207 ரன்கள் இலக்கு:

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மர்றும் பாப் டு பிளேசிஸ் களமிறங்கினர். இந்த தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்தது. சிறப்பான தொடக்கம் தந்த கே.எல்.ராகுல் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணியின் அடுத்த 10 ரன்களுக்குள் டு பிளெசிஸூம் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக உள்ளே வந்த செடிகுல்லா அடால் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிறு 93 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருண் நாயர், சமீர் ரிஸ்வியுடன் இணைந்து 62 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை பில்டப் செய்தார். இதன் தொடர்ச்சியாக, கருண் நாயர் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். நாயர் அவுட் ஆனப்போது டெல்லி அணிக்கு 30 பந்துகளில் 52 ரன்கள் தேவையாக இருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி:

சமீர் ரிஸ்வி ஒரு முனையில் 25 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க, டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 18 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் இடையே 53 ரன்கள் ஆட்டமிழக்காத பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்களும், மார்கோ ஜான்சன் மற்றும் பிரவீன் துபே தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

டெல்லி அணியில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் யார்..?

டெல்லி கேபிடல்ஸ் அணியில் 207 ரன்களை துரத்தியபோது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து தனது அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். மேலும், விப்ராஜ் நிகாம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.