Indian T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மாறும் கேப்டன்சி.. சூர்யாக்கு பதிலாக புதிய கேப்டன் யார்?
Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவுக்கு 2026 டி20 உலகக் கோப்பையே இவரது கடைசி கேப்டன்ஷியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் சூர்யகுமார் யாதவின் வயது, சமீபத்திய ஃபார்ம் மற்றும் பிசிசிஐயின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, சூர்யா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அடுத்த டி20 கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா (Rohit Sharma) டி20யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, இந்திய டி20 அணிக்கு தலைமையேற்ற சூர்யகுமார் யாதவ் இதுவரை இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்தினார். மேலும், இவரது தலைமையில் இந்திய டி20 அணி இதுவரை தொடரை இழந்தது கிடையாது. 39 டி20 சர்வதேச போட்டிகளில், இந்தியா 28 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இருப்பினும், சூர்யகுமார் யாதவுக்கு 2026 டி20 உலகக் கோப்பையே இவரது கடைசி கேப்டன்ஷியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் சூர்யகுமார் யாதவின் வயது, சமீபத்திய ஃபார்ம் மற்றும் பிசிசிஐயின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, சூர்யா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அடுத்த டி20 கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ALSO READ: அன்றைய நாளில் ஓய்வு முடிவை யோசித்தேன்.. பகீர் கிளப்பிய ரோஹித் சர்மா! விரைவில் ஓய்வா?
சுப்மன் கில்:
சுப்மன் கில் மோசமான ஃபார்ம் காரணமாக 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், கேப்டன் பதவி தேர்வில் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 3 வடிவங்களுக்கும் ஒரே ஒரு கேப்டனை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. சுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தலைமை தாங்கி வருகிறார். எனவே, சூர்யகுமார் யாதவுக்கு பிறகு கில்லுக்கு டி20 அணியின் கேப்டன் பொறுப்பை வழங்கலாம். கில்லின் வயது மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தேர்வாளர்கள் கில்லின் பெயரை நீண்ட காலமாக பரிசீலித்து வருகின்றனர்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
கில்லுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பெயரும் கேப்டன் பதவிக்கு வலுவாக இருந்து வருகிறது. ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து சென்றபோது ஷ்ரேயாஸ் ஐயரை பரவலாக பலரும் பாராட்டினர். ஐபிஎல் 2025 சீசனில் கேப்டன்சி மட்டுமல்லாது 604 ரன்களையும் குவித்தார். இனி வரும் காலங்களில் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், தேர்வாளர்கள் அவரைப் புறக்கணிப்பது கடினம்.
ALSO READ: புதிய கேப்டனை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்..? அக்சர் படேல் கேப்டன்ஷிக்கு ஆபத்தா?
அக்சர் படேல்:
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார். மேலும், இந்திய அணியில் தற்போதைய வீரர்களில் அனுபவ வீரர் மற்றும் முக்கிய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் அவரது கேப்டன்சி அனுபவமும் அவருக்கு சாதகமாக செயல்படுகிறது. தேர்வாளர்கள் டி20 போட்டிகளுக்கு அமைதியான கேப்டனைத் தேடுகிறார்களானால், அக்சர் ஒரு வலுவான தேர்வாக இருக்கலாம்.