Akash Deep’s Historic Knock: நைட் வாட்ச்மேனாக அரைசதம்.. புதிய வரலாறு எழுதிய ஆகாஷ் தீப்..!

Akash Deep Achieves Double Feat: ஓவல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் வரலாறு படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் நைட் வாட்ச்மேனாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Akash Deeps Historic Knock: நைட் வாட்ச்மேனாக அரைசதம்.. புதிய வரலாறு எழுதிய ஆகாஷ் தீப்..!

ஆகாஷ் தீப்

Published: 

02 Aug 2025 20:01 PM

ஓவல் டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (Akash Deep) வரலாறு படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் (India – England 5th Test) இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது நைட் வாட்ச்மேனாக உள்ளே வந்த ஆகாஷ் தீப், போட்டியின் 3வது நாளான இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ம் தேதி இங்கிலாந்து அணிக்கு (England Cricket Team) எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது மட்டுமின்றி, அரைசதமும் அடித்தார். இதன்மூலம், ஆகாஷ் தீப் வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய அணியின் சாய் சுதர்சன் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஆகாஷ் தீப் 4வது இடத்தில் நைட் வாட்ச்மேனாக பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக களமிறங்கிய முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார். தொடர்ந்து, ஆகாஷ் தீப் மூன்றாவது விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மட்டுமின்றி, தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் அரைசதத்தை 70 பந்துகளில் அடித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஆகாஷ் தீப் 94 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ALSO READ: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்.. சர்ச்சை எப்படி தொடங்கியது?

பல்வேறு சாதனை படைத்த ஆகாஷ் தீப்:


வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி 50 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ஆகாஷ் தீப் படைத்தார். இந்த பட்டியலில் இர்ஃபான் பதான் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இர்ஃபான் பதான் இந்த சாதனையை படைத்தார். இதனை தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்திலும், கடந்த 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.

ALSO READ: ஓவல் வானிலை எப்படி இருக்கு? கடைசி டெஸ்ட்டில் தவிக்கும் இந்திய அணி

2011ம் ஆண்டுக்கு பிறகு, 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய நைட் வாட்ச்மேன் என்ற பெருமையை ஆகாஷ்தீப் பெற்றுள்ளார். கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் நைட் வாட்ச்மேனாக அதிக ரன்கள் எடுத்த சாதனையை அமித் மிஸ்ரா வைத்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமித் மிஸ்ரா 84 ரன்கள் குவித்தார். இந்த பட்டியலில் ஆகாஷ்தீப் 66 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அமித் மிஸ்ரா பெயரே 3வது இடத்தில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக அமித் மிஸ்ரா 50 ரன்கள் எடுத்திருந்தார்.