IND vs WI 2nd Test: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட்! இன்று தொடங்கும் போட்டியை எப்போது, எங்கே காணலாம்?
IND vs WI 2nd Test Live Streaming: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும், இந்திய அணி 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (IND vs WI) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 10ம் தேதி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும். முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொரடை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி (Indian Cricket Team) களமிறங்கும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பெறும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக இது அமையும்.
இரண்டாவது டெஸ்டுக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் இருக்காது என்பதை உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எப்போது, எந்த நேரத்தில் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?
இரண்டாவது டெஸ்ட் எப்போது, எங்கு நடைபெறும்?
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 10ம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும். போட்டியின் நேரடி ஒளிபரப்பு இந்திய நேரப்படி காலை 9:30 மணி முதல் ஜியோஹாட்ஸ்டார் ஆப்பில் கண்டுகளிக்கலாம். அதேநேரத்தில், டிவியில் பார்க்க விரும்புவோர் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் நேரடியாக காணலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும், இந்திய அணி 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடந்த 42 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தொடரும், ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!
இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), என்.ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஜான் கேம்பல், டெக்னாரின் சந்தர்பால், அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர், ஜோஹன் லைன், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், ஜாடியா பிளேட்ஸ், கெவலன் ஆண்டர்சன், டெவின் இம்லாச்.