IndvsSA: டி20 உலகக்கோப்பையில் இதுவரை அதிகமுறை வென்ற அணி எது? வெல்லப்போவது யார்?
IndvsSA : டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகள் எத்தனை? அதிகமுறை வென்ற அணிகள் எது என்பது குறித்து பார்க்கலாம்.

சூர்யகுமார் யாதவ் - எய்டன் மார்க்ரம்
டி20 உலகக்கோப்பையில் (T20WorldCup) லீக் சுற்றில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் பல முறை மோதியுள்ளன. கிரிக்கெட் உலகில் இரண்டு வலுவான அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துபவையா இருந்து வருகின்றன. அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளின் நேருக்கு நேர் மோதிய போது அதிக வெற்றிபெற்ற அணிகள் எது? எந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் என்பது போன்ற சுவாரசிய தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்
டி20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த பிப்ரவரி 7, 2026 அன்று முதல் துவங்கி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று வலுவான அணியாக உள்ளது. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் நடைபெறும் முதல் போட்டியில் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டிகள் எவ்வளவு? அதில் எந்த அணிகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : Abhishek Sharma: அடுத்தடுத்து ஜீரோ.. T20 உலக்கோப்பையில் அதிக ‘ டக்அவுட்’.. அபிஷேக் சர்மாவின் மோசமான சாதனை!
நேருக்கு நேர் சாதனை
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இதுவரை மொத்தம் 7 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் வீராட் கோலி அதிரடியாக ஆடி 76 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படிக்க : ஷிவம் துபே அதிரடி… நெதர்லாந்துக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
- கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
- கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது.
- அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெர்றது.
- மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.