India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?

India vs Pakistan Live Streaming: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மோதுவது இது 9வது முறையாகும். தற்போது இந்திய அணி 7-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் இந்திய அணி 13-3 என்ற கணக்கிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. கடந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

13 Feb 2026 20:17 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை (India vs Pakistan) காண அனைத்து பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 2026 டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் சிறப்பாக இருந்தன. அமெரிக்கா மற்றும் நமீபியா அணிக்கு எதிரான போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எளிதாக வென்றது. இந்திய அணியைப் போலவே, பாகிஸ்தானும் அதன் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதன்படி, நெதர்லாந்தை மற்றும் அமெரிக்காவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி எப்போது, ​​எந்த நேரத்தில் தொடங்கும், எங்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், எந்த ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. கொழும்பு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி?

இந்தியா vs பாகிஸ்தான் டி20யில் இதுவரை நேருக்கு நேர்:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மோதுவது இது 9வது முறையாகும். தற்போது இந்திய அணி 7-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் இந்திய அணி 13-3 என்ற கணக்கிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. கடந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்யவில்லை. கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணிக்கு இப்படியான சிறப்பான சாதனை இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியிலும் இந்திய அணி நிச்சயம் அழுத்தத்தை எதிர்கொள்ளும். இது இரு நாடுகளுக்கும் ஒரு கௌரவப் போட்டி என்பதால், இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எந்த தேதியில் நடைபெறும்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுகிறது. இது 2026 டி20 உலகக் கோப்பையின் 27வது போட்டியாகும்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறும்?

ஆர் பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

2026 பிப்ரவரி 15ம் தேதி டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 3வது போட்டிதான் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுகிறது, இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். போட்டிக்கு முன்னதாக டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை எந்த சேனல் நேரடியாக ஒளிபரப்பும்?

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை எந்த ஆப்களில் நேரடியாகப் பார்க்கலாம்?

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.

ALSO READ: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!

இரு அணிகளின் முழு விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

பாகிஸ்தான் அணி:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் கான்.

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..