Asia Cup 2025 : இந்தியா – பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார் ?
Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வருகிற செப்டம்பர் 14, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை எதிர்கொண்ட போட்டிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கேஎல்.ராகுல் - சல்மான் அலி
ஆசிய கப் 2025 போட்டிகள் கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. யுனைட்டட் அரபு எமிரேட்ஸ்க்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் (Pakistan) போட்டிகள் கடந்த செப்டம்பர் 14, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற ஆசிய கப் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணி எந்த அணிகள் அதிக முறை வெற்றி பெற்றிருக்கின்றன உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகள்
டி20 போட்டிகள்
இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தம் 13 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 9 வெற்றிகளைப் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி 3 முறை வென்றுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் அதற்கு பின் நடந்த இரு போட்டிகளில் இந்தியா அணி பாகிஸ்தானை வென்றது.
ஒருநாள் போட்டிகள்
இதுவரை ஆசிய கப் போட்டியில் 15 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறை வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. பாகிஸ்தான் அணி கடைசியாக ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது கடந்த 2014 ஆம் ஆண்டு தான். அதன் பிறகு ஒருமுறை இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை.
இதையும் படிக்க : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?
தற்போதைய இந்திய அணியின் பலம்
- தற்போது இந்திய அணி ஐசிசியின் டி20 போட்டிகளின் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது.
- ரன்கள் அடிப்படையில் உலகின் தலை சிறந்த 2 வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சார்பாக விளையாடுகின்றனர்.
- மேலும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா போன்ற பலம் வாய்ந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர்.
- பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஸ்பின்னை பொறுத்தவரை குல்தீப் யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் யுஏஇக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படிக்க : சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!
பாகிஸ்தானின் அணியின் செயல்பாடு
- ஆசிய கோப்பைக்கு முன்பு நடந்த 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது.
- அந்த தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது.
- கடந்த 5 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
- இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வெற்றிபெற்ற போட்டிகளில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
- அதே நேரம், பாகிஸ்தான் அணி துபாயில் நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்துள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது. எனினும் பாகிஸ்தான் அணியும் கணிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. எனவே வருகிற செப்டம்பர் 14 அன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ரசிகர்களுக்கு உண்மையான திருவிழாவாக இருக்கும்.