IND vs NZ 4th T20: ஷிவம் துபேவின் அதிவேக அரைசதம் வீண்.. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!
IND vs NZ 4th T20 Highlights: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஷிவம் துபே - நியூசிலாந்து அணி
இந்தியா மற்றும் நியூசிலாந்து (Ind vs Nz) அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது. நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம், இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube) வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஷிவம் துபே அசத்தல்
200 ரன்களை கடந்த நியூசிலாந்து:
டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் 36 பந்துகளில் 62 ரன்களும், டெவோன் கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு விரைவான மற்றும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பின்னர், டேரில் மிட்செல் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க உதவி செய்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஏமாற்றம் அளித்த அபிஷேக் சர்மா:
New Zealand win the 4th T20I by 50 runs in Vizag.#TeamIndia lead the series 3⃣-1⃣
Scorecard ▶️ https://t.co/GVkrQKKyd6 #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/zkfXdvEwGD
— BCCI (@BCCI) January 28, 2026
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே கோல்டன் டக்-ஆக ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் சீக்கிரமே வெளியேற, 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சனும் ஏமாற்றம் அளித்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிந்த பிறகு, சிவம் துபே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளே வந்து, 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்களின் ஆதரவு இல்லாததால் இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது. இதன் காரணமாக, இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்காக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி மற்றும் ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி தொடரில் நியூசிலாந்து அணிக்கு புது உத்வேகத்தை கொடுத்தது. அதேநேரத்தில், இந்த தோல்வி இந்தியாவிற்கு ஒரு பாடமாக அமைந்தது. வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் 2026 டி20 உலகக் கோப்பை தொடங்க இருப்பதால், இந்திய அணி செய்த தவறுகளை சரி செய்துகொள்ள வேண்டும்.