Shubman Gill Captaincy: கில்லுக்கு கேப்டனாக இதுவே முதல் தொடர்! நேரம் கொடுங்கள்.. ஆதரவாக பேசிய கபில் தேவ்!

India vs England Test series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இளம் கேப்டன் சுப்மன் கில்லின் தலைமைத்துவம் குறித்து கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கில்லுக்கு போதுமான அனுபவம் தேவை எனவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Shubman Gill Captaincy: கில்லுக்கு கேப்டனாக இதுவே முதல் தொடர்! நேரம் கொடுங்கள்.. ஆதரவாக பேசிய கபில் தேவ்!

சுப்மன் கில் - கபில் தேவ்

Published: 

27 Jul 2025 15:39 PM

 IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இளம் இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு (Shubman Gill) ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். தலைமைத்துவத்தின் அடிப்படையில் அனுபவம் கிடைக்க சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் (Kapil dev) தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் (Indian Cricket Team) டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி பர்மிங்காவில் வெற்றி பெற்றது. இருப்பினும், தற்போது இந்திய அணி தொடரில் 1-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி டிரா செய்யலாம் அல்லது தோல்வியை சந்திக்கலாம். கேப்டன் கில்லுக்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும் என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் குறித்து கபில் தேவ்:

இந்திய கேப்டன் சுப்மன் கில் குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், “சுப்மன் கிலுக்கு நேரம் கொடுங்கள். இது அவருக்கு கேப்டனாக முதல் தொடர், தவறுகள் செய்வது இயல்புதான். காலப்போக்கில் அனைத்தையும் கற்றுக்கொள்வார். கில் கற்றுக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. கில் தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார், இது மிகவும் முக்கியமானது.

ALSO READ: இங்கிலாந்து தொடரில் தலா 500 ரன்கள்.. முத்திரை பதித்த கே.எல்.ராகுல் – சுப்மன் கில்!

இது ஒரு இளம் இந்திய அணி, அவர்களுக்கு விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இளம் வீரர்கள் வெற்றியை பதிவு செய்வார்கள். உலகில் உள்ள எந்த புதிய அணியும் தங்களை மாற்றிக் கொள்ள நேரம் எடுக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர், கில்லுக்கு கற்றுக்கொள்ள ஒரு படியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

பும்ரா குறித்து பேசிய கபில் தேவ்:


வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் விளையாட முடிவு செய்ததை கபில் தேவ் ஆதரித்தார். அப்போது பேசிய அவர், “காயத்தை தவிர்க்க இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா தேர்வு செய்திருந்தார். எல்லோரும் வித்தியாசமானவர்கள் என்று நான் நினைக்கிறேன். காலம் மாறிவிட்டது. ஒவ்வொருவரின் உடலும் உத்தியாசமானது. அனைவரையும் ஒரே தராசில் எடைபோடுவது சரியல்ல, நம்மிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர், ஆனால் அவரது அதிரடி மிகவும் வித்தியாசமானது, இத்தகைய சூழ்நிலையை உடற்தகுதியை பராமரிப்பது கடினம்.

ALSO READ: 3வது டெஸ்டில் ஜாக் கிரௌலியுடன் வாக்குவாதம் ஏன்..? சுப்மன் கில் விளக்கம்..!

பும்ரா தனது உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அவரது வாழ்க்கை இவ்வளவு நீளமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதுபோன்ற போதிலும், அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார். இது மிகவும் நல்லது.” என்றார்.

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஸ்டோக்ஸை விட சிறந்த வீரர் என்று கபில் தேவ் என்றார். அதில், “நான் ஒப்பிட விரும்பவில்லை. ஸ்டோக்ஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர், ஆனால், ஜடேஜா இன்னும் அவரை விட முன்னேற்றம் அடைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.