IND vs AUS 2nd ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எந்த நேரத்தில் தொடங்குகிறது..?

IND vs AUS 2nd ODI Live Streaming: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 23ம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

IND vs AUS 2nd ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எந்த நேரத்தில் தொடங்குகிறது..?

மிட்செல் மார்ஷ் - சுப்மன் கில்

Published: 

23 Oct 2025 07:00 AM

 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (IND vs AUS) முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், இந்திய அணி தற்போது தொடரில் 1-0 என பின்தங்கியுள்ளது. இனி, இந்திய அணி (Indian Cricket Team) தொடரின் இரண்டாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அப்போது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணியால் தக்க வைத்து கொள்ள முடியும். பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் வெறும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் இந்தியா பெரிய ஸ்கோரைப் பதிவு செய்யத் தவறியது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

ALSO READ: அடுத்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்… ரோகித் சர்மா – விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு

இந்தியா – ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 23ம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, காலை 8:30 மணிக்கு டாஸ் போடப்படும். முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெற முயற்சிக்கும். தொடரில் இந்தியா தொடர்ந்து நீடிக்க இந்த போட்டி மிகவும் முக்கியமானது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியை நீங்கள் எங்கே பார்க்கலாம்?

இந்தியா – ஆஸ்திரேலியா இடைஇந்த விறுவிறுப்பான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் நேரடியாகப் பார்க்கலாம். கூடுதலாக, போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் காணலாம்.

ALSO READ: தொடக்க வீரராக இளம் வீரரை தயார் படுத்தும் ரோஹித்.. கம்பீர் கட்டாயமா..?விரைவில் ஓய்வா?

இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதீஸ் குமார் ரெட்டி

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.