இங்கிலாந்தை ஜெயிக்கணும்னா குல்தீப் யாதவ் வேணும்… இந்தியாவுக்கு மைக்கேல் கிளார்க் அறிவுரை

Clarke Backs Kuldeep Yadav : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார், இந்தியா அணி குல்தீப் யாதவை தேர்வு செய்யாதது குறித்து விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தை ஜெயிக்கணும்னா குல்தீப் யாதவ் வேணும்... இந்தியாவுக்கு மைக்கேல் கிளார்க் அறிவுரை

குல்தீப் யாதவ் - மைக்கேல் கிளார்க்

Published: 

27 Jun 2025 19:07 PM

 IST

தற்போது இந்தியா (India) மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியில் இந்தியா எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய இலக்கான 371 ரன்களை இங்கிலாந்து எளிதாக எடுத்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதற்கு இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பும்ராவைத் (Jasprit Bumrah) தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் சோபிக்க தவறினர். இந்த போட்டியில் இந்திய அணி  ரவீந்திர ஜடேஜா என்ற ஒரே ஸ்பின்னர் மட்டுமே இடம் பெற்றிருந்தார். மேலும் ஜடேஜா இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் அவரது தேர்வில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (Michael Clarke) இந்திய அணியின் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் கடும் விமர்சனம்

இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், “இந்தியா குல்தீப் யாதவ் போல ஒரு விக்கெட் எடுக்கும் ஸ்பின்னரை அணியில் சேர்க்காமல் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. இது அவர்களது தவறான முடிவை காட்டுகிறது. குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பது பற்றி அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அவர் ஒரு விக்கெட் எடுக்கும் திறமை வாய்ந்த பவுலர். இங்கிலாந்தில் வெல்ல வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குல்தீப் யாதவின் முக்கியத்துவம் குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து

 

பியாண்ட் 23  பாட்ட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய கிளார்க், “இந்தியா நிறைய நாட்களாக பேட்டிங் டெப்த் பற்றிய கவலையால் பவுலிங் தரத்தை மறந்துவிட்டார்கள்.  வெற்றி பெற வேண்டுமென்றால் 20 விக்கெட் எடுக்க வேண்டும். அதுக்கு முக்கியமான நபர் குல்தீப் யாதவ் என்று அவர் பேசினார்.

ஜடேஜா வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை

முதலாவது டெஸ்டில், ஜடேஜாவுக்கு இருந்த ஸ்பின்னருக்கான ரஃப் பேட்ச்சைக் கூட சரியாக பயன்படுத்த முடியவில்லை. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஜடேஜா பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் நேராகவே பந்து வீசியதால் பண்ணியதால் விக்கெட் எடுக்க முடியவில்லை” என்று கிளார்க் தெரிவித்தார்.

முதல் இன்னிங்ஸில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட அவரால் எடுக்க முடியவில்லை. பும்ரா ஒரு ஸ்டார். ஆனால், முகமதுசிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா சரியான லெந்த்தில் பந்து வீசாமல், இங்கிலாந்து வீரர்கள் ரன் அடிக்க வாய்ப்பு தந்தாங்க. இது பும்ராவுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்றார்.

Related Stories
ICC Women World Cup 2025: அரையிறுதி அபாயம்! 5வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா.. புள்ளிகள் பட்டியல் நிலவரம்!
அடுத்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்… ரோகித் சர்மா – விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
Mitchell Starc: ரோஹித்துக்கு எதிராக மணிக்கு 176.5 கிமீ வேகத்தில் பந்து வீசினாரா ஸ்டார்க்? வைராகும் புகைப்படம்!
India Women vs England Women: 3 அரைசதம் அடித்து தொட முடியாமல் போன இலக்கு.. இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!
IND vs AUS: 437 நாட்களுக்கு பிறகு! ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி!
Australia vs India 1st ODI: தீபாவளி பரிசை தர தவறிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி!