India vs England Test Series: தொடரை சமன் செய்து சாதனையை குவித்த இந்தியா.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!

Historic Oval Test Win and Records: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அற்புத வெற்றி பெற்றது. இது இங்கிலாந்து மண்ணில் 10 ரன்களுக்குள் வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தது. இந்த வெற்றியால் 5 போட்டித் தொடர் 2-2 என சமனானது. கடைசி டெஸ்டில் இந்தியா வென்றது இதுவே முதல் முறையாகும்.

India vs England Test Series: தொடரை சமன் செய்து சாதனையை குவித்த இந்தியா.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

04 Aug 2025 22:13 PM

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற 5வது டெஸ்ட் (India – England Test Series) போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை குவித்தது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 சமன் செய்தது. 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி (Tendulkar Anderson Trophy) முதல் 4 டெஸ்ட் போட்டிகளை போலவே, 5வது டெஸ்ட் போட்டியும் 5வது நாள் வரை சென்றது. 374 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி அதிகபட்சமாக முகமது சிராஜ் (Mohammed Siraj) 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

வரலாறு படைத்த இங்கிலாந்து அணி:

ஓவலில் கிடைத்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 10 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 3வது அணி என்ற பெருமையையும், 123 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்த முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது. இதற்கு முன்பு, கடந்த 1882 மற்றும் 1902 ம் ஆண்டுகளில் ஒரு அணி, இங்கிலாந்து அணியை 10 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்கடித்தது 2 முறை மட்டுமே நடந்துள்ளது.

ALSO READ: 2-2 என சமனான தொடர்..! கடைசி நாளில் மாஸ் செய்த சிராஜ்.. இந்திய அணி த்ரில் வெற்றி!

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்து டெச்ட் கிரிக்கெட்டில் 10 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. அவற்றில் ஒன்று கடந்த 2023ம் ஆண்டு வெலிங்டனில் நியூசிலாந்திடம் ஒரு ரன் வித்தியாசத்திலும், கடந்த 1885ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவிடம் 6 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

ஓவலில் கிடைத்த வெற்றி, இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் 10 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் வென்ற முதல் நிகழ்வாகும். 2004ம் ஆண்டு மும்பையின் வான்கடே மைதானத்தில் சவுரவ் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றிக்குப் பிறகு, சுப்மன் கில் தலைமையிலான அணி 21 ஆண்டுகளாக நிலைத்து நின்ற சாதனையை முறியடித்தது.

ALSO READ: வெற்றியை பெற்று 3வது இடத்தை தொட்ட இந்திய அணி.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்!

கடைசி போட்டியில் முதல் வெற்றி:


5 அல்லது 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும். கடந்த கடைசி 17 போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் தோல்விகளையும், 7 போட்டிகளையும் டிரா செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா தொடரை 2-2 என சமன் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 2வது முறையாக இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2021 – 22 தொடரையும் அதே வித்தியாசத்தில் இந்திய அணி சமன் செய்தது. இதற்கிடையில், இந்திய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Related Stories
WTC 2025–27 Points Table: வெற்றியை பெற்று 3வது இடத்தை தொட்ட இந்திய அணி.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்!
India vs England Test Series 2025: 2-2 என சமனான தொடர்..! கடைசி நாளில் மாஸ் செய்த சிராஜ்.. இந்திய அணி த்ரில் வெற்றி!
India vs England Test Series 2025: ஒரே தொடரில் 21 சதங்கள்.. 70 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்தியா – இங்கிலாந்து!
India vs England 5th Test: ஃபீல்டிங்கில் அடுத்தடுத்து சொதப்பல்.. வெற்றியை தட்டிவிட்ட இந்திய வீரர்கள்.. கடுப்பான சுப்மன் கில்!
India Dominates England 2025: அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள்.. இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!
India – England 5th Test: ‘தி ஓவல்’ ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ் இவ்வளவா..? இந்தியா தடுத்து தொடரை தக்க வைக்குமா..?