Shubman Gill’s Century: 35 ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி.. சதம் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!

India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் அற்புதமான சதம் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார்.

Shubman Gills Century: 35 ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி.. சதம் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!

சுப்மன் கில் சதம்

Published: 

27 Jul 2025 18:25 PM

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் (India – England 4th Test) இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மீண்டும் சதம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில், சுப்மன் கில் ஒரு அற்புதமான சதத்தை அடித்து தனது அணியை வலுவான நிலையில் வைத்தது மட்டுமல்லாமல், தனது பெயரில் ஒரு வரலாற்று சாதனையையும் படைத்தார். இந்த தொடரில் சுப்மன் கில்லின் நான்காவது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு (Old Trafford Cricket Ground) மைதானத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய கேப்டன் சதம் அடித்துள்ளார். இது மட்டுமல்லாமல், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் கில்லின் மாயாஜாலம்:

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்டில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். ஆனால்,  கேப்டன் சுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தனது நிதானத்தை வெளிபடுத்தி இந்திய அணியை மீட்டெடுத்தனர். அதிலும், குறிப்பாக சுப்மன் கில் எச்சரிக்கையுடன் விளையாடி படிப்படியாக வேகம் கொடுத்து கவர் டிரைவ், லாஃப்ட் ஷாட்கள் மற்றும் பேக்ஃபுட் பஞ்ச் போன்ற ஷாட்களுடன் 228 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். அதேநேரத்தில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ALSO READ: கில்லுக்கு கேப்டனாக இதுவே முதல் தொடர்! நேரம் கொடுங்கள்.. ஆதரவாக பேசிய கபில் தேவ்!

35 ஆண்டுகளுக்குப் பிறகு படைக்கப்பட்ட வரலாறு:


சுப்மன் கில்லுக்கு முன்பு, மான்செஸ்டரில் கடைசி சதத்தை பதிவு செய்தவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்தான். இவர் இந்த சதத்தை கடந்த 1990ம் ஆண்டு பதிவு செய்தார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, சுப்மன் கில் சதத்தை பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில், மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் சதம் அடிப்பது எப்போதும் இந்திய கேப்டன்களுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு தொடக்கத்தில் முகமது அசாருதீன் மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் கேப்டனாக சதம் அடித்தார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கில் வரலாற்றை மாற்றி எழுதினார். அதனால், இந்த சாதனையும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் கில் இளம் வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தொடர்ந்து தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ALSO READ: இங்கிலாந்து தொடரில் தலா 500 ரன்கள்.. முத்திரை பதித்த கே.எல்.ராகுல் – சுப்மன் கில்!

இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையையும் சுப்மான் கில் படைத்தார். அவருக்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 712 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் இப்போது ஜெய்ஸ்வாலை முந்தியுள்ளார். இது மட்டுமல்லாமல், டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் 4 சதங்கள் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையையும் கில் படைத்துள்ளார்.