T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
IndvsZim : ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 72 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. கடைசி வரை போராடிய ஜிம்பாப்வே அணியின் பிரயன் பென்னட்டின் ஆட்டம் வீணானது.

ஹர்திக் பாண்ட்யா - திலக் வர்மா
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை முற்றிலும் ஆதிக்கம் செலுத்தி புதிய பேட்டிங் சாதனைகளை படைத்துள்ளது. நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 17 சிக்சர்கள் அடித்து அசத்தினர்.
இந்த தொடரில் 257 ரன்கள் குவித்த இந்திய அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 218 ரன்கள் எடுத்ததே இந்தியா எடுத்த அதிகபட்ச ரண்களாக பார்க்கப்பட்டது. மேலும் இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த 254 ரன்களையும் இந்தியா முந்தியது. மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும்.
இதையும் படிக்க : IND vs ZIM: தென்னாப்பிரிக்கா ஜெயிக்கணும்.. இந்திய அணிக்காக வேண்டும் ரசிகர்கள்.. அரையிறுதி போர் சொல்வது என்ன?
ஃபார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா
இந்த உலகக்கோப்பை 2026 தொடரில் 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, தன் மீதான விமர்சனங்களுக்கு இந்த போட்டியில் பேட் மூலம் பதிலளித்தார்.வெறும் 26 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணி ரன் ரேட் உயர காரணமாக அமைந்ததார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் அதன் பிறகு வந்த இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர்.
இஷான் கிஷன் 38 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா – திலக் வர்மா ஜோடி ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை ருத்ர தாண்டவம் ஆடினர். குறிப்பாக திலக் வர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதனையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 256 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க : ஐசிசி டி20 தரவரிசை – மோசமான ஃபார்மிலும் முதலிடத்தில் அபிஷேக் சர்மா, டாப் 10ல் பும்ரா
ஒன்மேனாக போராடிய பென்னட்டின் ஆட்டம் வீண்
இதனையடுத்து 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியால் நிதானமாக ஆடியது. பெரிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்தில் ஒரு ஓவருக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அணியால் அதிரடியாக ஆட முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனியாளாக போராடிய பிரயன் பென்னட் அதிரடியாக ஆடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். அதில் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். இந்த தொடரில் இதுவரை சிக்சர் அடிக்காத பென்னட், இந்தியாவுக்கு எதிரான ஒரே தொடரில் 6 சிக்சர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் கைகொடுக்காததால் அவரது ஆட்டம் வீணானது. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.