IND vs WI: 196 ரன்கள் இலக்கு.. இந்திய அணி 12 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா? புள்ளி விவரங்கள்!
India Highest Chase: ஈடன் கார்டன்ஸில் நடந்த டி20 போட்டிகளில் இதுவரை எந்த சர்வதேச அணியும் 158 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக துரத்தியதில்லை. இந்தியா இப்போது தங்கள் சொந்த மண்ணில் மற்றும் கொல்கத்தா மைதானத்தின் வரலாற்றுத் தன்மை இரண்டையும் மீறி வெற்றியை ருசிப்பது முக்கியம்

சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன்
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி நடைபெற்று வரும் ஈடன் கார்டனில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் (Ind vs wi) அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து தனது பலத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எட்டாத ஒரு மலை போன்ற இலக்கை எட்ட வேண்டியுள்ளது. இந்த 196 ரன்கள் இலக்கை இந்தியா அடையத் தவறினால், 2026 டி20 உலகக் கோப்பை பயணம் இன்று இரவுடன் முடிவடையும். எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எப்படியாவது இந்த இலக்கை எட்ட வேண்டியது முக்கியம்.
ALSO READ: கடைசி நேரத்தில் பவுல் – ஹோல்டர் காட்டடி.. இந்திய அணிக்கு 196 ரன்கள் இலக்கு!
இந்தியாவின் அதிகபட்ச சேஸிங்:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேசிங் 2014ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 173 ரன்கள் மட்டுமே ஆகும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை பார்க்கும்போது இந்திய அணிக்கு 20 ஓவர்களில் 196 ரன்கள் தேவையாக உள்ளது. அதன்படி, டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவின் அதிகபட்ச ரன் சேசிங் 173 ஆகும். இந்திய அணி 2026 உலகக் கோப்பையில் தொடர்ந்து பயணிக்க சேசிங்கில் 173 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து 23 ரன்களை கூடுதலாக பெற வேண்டியது முக்கியம்.
ஈடன் கார்டன் ஸ்டேடியத்தின் வரலாறு என்ன..?
ஈடன் கார்டன்ஸில் நடந்த டி20 போட்டிகளில் இதுவரை எந்த சர்வதேச அணியும் 158 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக துரத்தியதில்லை. இந்தியா இப்போது தங்கள் சொந்த மண்ணில் மற்றும் கொல்கத்தா மைதானத்தின் வரலாற்றுத் தன்மை இரண்டையும் மீறி வெற்றியை ருசிப்பது முக்கியம்.
ALSO READ: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற.. எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்?
விராட் கோலி இல்லாமல் இந்திய அணியில் வெற்றிடமா?
இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் பரவத் தொடங்கியுள்ளது, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஒருபோதும் 150 ப்ளஸ் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியதில்லை. கோலி இனி இந்த மிடில் ஆர்டரின் நங்கூரமாக இல்லாததால், கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய அணியும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டிய சுமை இப்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் மீது உள்ளது.