IND vs SA Series: முதல் போட்டியிலேயே வரலாறு படைக்கும் ரோஹித்-கோலி ஜோடி.. எப்படி தெரியுமா?
India Vs South Africa ODI Series 2025: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் சொந்த மண்ணில் இழந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்று தென்னாப்பிரிக்கா அணியை பழிவாங்க இந்திய அணி முயற்சிக்கும்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே (India – South Afrcia ODI Series) 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியானது ராஞ்சியில் நடைபெறும். இந்தப் போட்டியின் மூலம், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி வரலாறு படைக்க இருக்கிறது. அதாவது, இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்குவதன் மூலம் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி அதிக சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய வீரர்களாக சாதனை படைப்பார்கள். இதன் மூலம், 391 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனையை கோலி-ரோஹித் ஜோடி முறியடிக்க இருக்கின்றனர். தற்போது, ரோஹித்-கோலி ஜோடியும் அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர்.
ALSO READ: டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்!
இந்தியாவுக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜோடிகள்:
Ruturaj gaikwad and Virat Kohli Batting practice together in the nets Season and Ranchi. (📷RevSportzGlobal ) pic.twitter.com/MBykIYfPvK
— Aditya (@AdityaBhatia009) November 28, 2025
இந்த போட்டியில் சச்சின் – ராகுல் ஜோடியை தவிர, ராகுல் டிராவிட் – முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் விளையாடி 369 சர்வதேச போட்டிகளில் விளையாடி, பட்டியலில் இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் கும்ப்ளே 367 சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். அதேபோல், சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி இணைந்து 341 சர்வதேச போட்டிகளில் விளையாடி, பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி ஆக்டிவ் வீரர்களில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா 309 போட்டிகளுடன் 5வது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் தொடரை வெல்லமா இந்திய அணி..?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் சொந்த மண்ணில் இழந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்று தென்னாப்பிரிக்கா அணியை பழிவாங்க இந்திய அணி முயற்சிக்கும். அதன்படி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ALSO READ: ராஞ்சியில் நடந்த ரீயூனியன்: “தோனி – கோலி கார் ரைடு”… கொண்டாட்டத்தில் அதிரும் இணையம்!!..
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் ஹெட் டூ ஹெட்:
கடந்த 1991ம் ஆண்டு முதல் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் இதுவரை மொத்தம் 94 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா அணியே முன்னிலை வகித்தது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 51 போட்டிகளிலும், இந்திய அணி 30 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.