India vs Pakistan: தொடக்கத்தில் சரவெடி காட்டிய அபிஷேக் – கில்.. மிடில் ஆர்டரில் தடுமாற்றம்.. வெற்றியை தட்டி எட்டிய இந்தியா!
IND vs PAK Asia Cup 2025: முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 18.5 வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா - திலக் வர்மா
2025 ஆசியக் கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக பர்ஹான் 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய சார்பில் சிவம் துபே 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர். இலக்கை துரத்திய இந்திய அணி 18.5 வெற்றி பெற்றது.
172 ரன்கள் இலக்கு:
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் சர்மா களமிறங்கி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். ஷாஹீன் அப்ரிடி அவருக்கு ஒரு பவுன்சர் வீசவே, இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா பின் பக்கம் திருப்பி பந்தை பவுண்டரிக்கு திருப்பினார். மறுபுறம், சுப்மன் கில்லும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விரட்ட இந்திய அணி 4 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து, அபிஷேக் சர்மா கிடைக்கும் பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விரட்டினர்.
ALSO READ: இணையத்தில் விவாதத்தை கிளப்பும் ஃபகர் ஜமான் அவுட்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஒருபுறம் அபிஷேக் சர்மா வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடக்க, அதனுடன் இந்திய அணியும் 8.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்க, தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 39 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உதவியுடன் அப்ரார் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ALSO READ: அடுத்தடுத்து இந்திய அணி கேட்ச் ட்ராப்! சொதப்பிய அபிஷேக், குல்தீப் யாதவ்..!
அதன்பிறகு உள்ளே வந்த சஞ்சு சாம்சன், திலக் சர்மா சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோர் எண்ணிக்கையை மெல்ல மெல்ல உயர்த்த தொடங்கினர். இருப்பினும், ஸ்லோவாக விளையாடிய சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது, இந்திய அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது.
இந்திய அணி வெற்றி:
Asia Cup T20 2025. India Won by 6 Wicket(s) https://t.co/CNzDX2HcvN #INDvPAK #AsiaCup2025 #Super4
— BCCI (@BCCI) September 21, 2025
கூலாக உள்ளே வந்த ஹர்திக் பாண்ட்யா, ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் பவுண்டரியை விரட்டினார். இதனால், இந்திய ரசிகர்களின் பதட்டம் சற்று குறைந்தது. களத்தில் இருந்த திலக் வர்மா 28வது ஓவரில் ஒரு சிக்ஸர் தூக்க, மொத்தமாக அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. கடைசி 9 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், திலக் வர்மா சிக்ஸரை தூக்கினார். 2 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு போதும் என்ற சூழல் வந்தபோது, திலக் மீண்டும் பவுண்டரி அடித்து வெற்றியை பெற்று கொடுத்தார்.