India – Pakistan: அடுத்தடுத்து இந்திய அணி கேட்ச் ட்ராப்! சொதப்பிய அபிஷேக், குல்தீப் யாதவ்..!

India Catch Drop: ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் அபிஷேக் சர்மா இந்த கேட்சை தவறவிட்டார். பந்து காற்றில் ஸ்விங் ஆகி வெளியே சென்று கொண்டிருந்தது. ஃபர்ஹான் பேட்ஸ்மேன் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயல, அதை அபிஷேக் சர்மா தவறவிட்டார்.

India - Pakistan: அடுத்தடுத்து இந்திய அணி கேட்ச் ட்ராப்! சொதப்பிய அபிஷேக், குல்தீப் யாதவ்..!

இந்திய அணி கேட்ச் மிஸ்

Published: 

21 Sep 2025 21:17 PM

 IST

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். இது ஆரம்பத்திலேயே விக்கெட் எடுக்க நல்ல வாய்ப்பை கொடுத்தாலும், அபிஷேக் சர்மா அதை வீணடித்தார். ஃபர்ஹானுக்கு இது பேட்டிங் செய்ய மற்றொரு வாய்ப்பை வழங்கியது. ஹர்திக் பாண்ட்யா பந்தை அடிக்க ஃபர்ஹான் முயன்றபோது, அது தேர்ட் மேனை நோக்கி சென்றது, அப்போது, அங்கே நின்று கொண்டிருந்த அபிஷேக் பந்தை நோக்கி ஓடினார். ஆனால் அதைப் பிடிக்கத் தவறிவிட்டார். இதனால், ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி வருகிறார்.

என்ன நடந்தது..?


ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் அபிஷேக் சர்மா இந்த கேட்சை தவறவிட்டார். பந்து காற்றில் ஸ்விங் ஆகி வெளியே சென்று கொண்டிருந்தது. ஃபர்ஹான் பேட்ஸ்மேன் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார், ஆனால் அவரது பேட்டிங்கில் சரியாக படவில்லை. பந்து நீண்ட நேரம் காற்றில் இருந்தபோது, அபிஷேக் சர்மா பந்தை நோக்கி ஓடினார். அவர் கேட்சை எடுக்க முன்னோக்கி டைவ் செய்தபோது, கேட்சை தவறவிட்டார்.

குல்தீப் யாதவும் கோட்டை விட்ட கேட்ச்:


தொடர்ந்து, வருண் சக்கரவர்த்தி வீசிய 4.4 ஓவரில் சைம் தூக்கி அடிக்க பார்த்தார். அப்போது, அந்த பந்தானது பேட்டின் எட்ஜில் பட்டு கீப்பர் பின்னாடி நல்ல உயரத்திற்கு சென்றது. அப்போது, தேர்ட் மேன் இடத்தில் நின்ற குல்தீப் யாதவ் ஓடி வந்து கேட்ச் பிடிக்க முயற்சி செய்தார். சரியான இடத்தில் நின்று கைகளை நீட்டினாலும், பந்து பட்டு கீழே வீழ்ந்தது. அப்போது, கேப்டன் சூர்யகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தியும் அதிருப்தி அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக சைம் அயூபும், பர்ஹானும் தொடர்ந்து அதிரடியாக விளையாட பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 15 டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு அகமதாபாத்தில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.