IND vs ENG Semi Final: அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!

IND vs ENG Weather Report: வான்கடே ஸ்டேடியம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற ஆடுகளமாக கருதப்படுகிறது. தெளிவான வானிலை பனிப்பொழிவுக்கும் பங்களிக்கக்கூடும். எனவே, இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசத் தேர்வு செய்வது நல்லது. 

IND vs ENG Semi Final: அரையிறுதியில் மோதும் இந்தியா - இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!

இந்தியா - இங்கிலாந்து

Published: 

04 Mar 2026 17:35 PM

 IST

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND vs ENG) அணிகள் மோதவுள்ளன. இந்த மிக முக்கிய போட்டியானது நாளை அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வான்கடே மைதானத்தில் மாலை 7:00 மணிக்கு (IST) தொடங்கும். இதில், வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் போட்டியின் போது மழை வருமா, வானிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அரையிறுதிக்கு மழை அச்சுறுத்தலா? முக்கிய முடிவை எடுத்துள்ள ஐசிசி!

மும்பையில் வானிலை எப்படி இருக்கும்?

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, நாளை அதாவது மார்ச் 5ம் தேதி மும்பையில் தெளிவான வானம் இருக்கும் என்பதால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன்படி, பகல்நேர வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், இரவு வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின்போது ஈரப்பதத்தின் அளவு 35 முதல் 51 சதவீதம் வரை இருக்கும். இதனால், போட்டியானது எந்தவித தடங்கலும் இன்றி முழுமையாக நடைபெறும்.

பிட்ச் எப்படி..?

வான்கடே ஸ்டேடியம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற ஆடுகளமாக கருதப்படுகிறது. தெளிவான வானிலை பனிப்பொழிவுக்கும் பங்களிக்கக்கூடும். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசத் தேர்வு செய்வது நல்லது.

மழை பெய்தால் என்ன செய்வது?

மழை பெய்ய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி ஒரு ரிசர்வ் டே ஒதுக்கியுள்ளது. ஏதேனும் காரணத்தால் நாளை அதாவது 2026 மார்ச் 5 ம் தேதி போட்டியை முடிக்க முடியாவிட்டால், வருகின்ற 2026 மார்ச் 6ம் தேதி ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும்.

இருப்பினும், அரையிறுதி மற்றும் ரிசர்வ் நாள் இரண்டும் மழையால் ரத்து செய்யப்பட்டால், விதிகளின்படி இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏனெனில் சூப்பர் 8 கட்டத்தில் இங்கிலாந்து தங்கள் குரூப் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில், குரூப் ஏ பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ALSO READ: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி.. வான்கடேவில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி?

இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். எனவே, இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யாரை யார் பழிவாங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us
Related Stories
Pakistan Cricket Team: பாபர் அசாம் வேண்டாம்! புதிய வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!
ICC T20 Rankings: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான சிறப்பான ஆட்டம்.. ஐசிசி டி20 தரவரிசையில் எகிறிய சஞ்சு சாம்சன்!
IPL 2026: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!
IND vs ENG Semi Final: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி.. வான்கடேவில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி?
IPL 2026: சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள்.. மார்ச் 15 முதல் பயிற்சி.. ஆர்சிபி அணிக்கு 6 நிபந்தனைகள்!
SA vs NZ Semifinal: தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அரையிறுதிக்கு மழை அச்சுறுத்தலா? முக்கிய முடிவை எடுத்துள்ள ஐசிசி!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ