Virat Kohli Record: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர்.. விராட் கோலி படைத்த புதிய வரலாறு!

IND vs AUS 3rd ODI: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ரன் எதுவும் அடிக்காமல் டக் அவுட் ஆனார். இதையடுத்து, சிட்னி ஒருநாள் போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்தபோது விராட் கோலியின் கொண்டாட்டம் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

Virat Kohli Record: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர்.. விராட் கோலி படைத்த புதிய வரலாறு!

விராட் கோலி

Published: 

25 Oct 2025 15:56 PM

 IST

சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில், இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் விராட் கோலி, முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்கக்காராவை முந்தி ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார். இந்த போட்டியில் 60 ரன்களை கடந்து விளையாடி வரும் விராட் கோலி (Virat Kohli) 54 ரன்கள் எடுத்தபோது தனது 305வது ஒருநாள் போட்டியில் 14,235 ரன்களை எடுத்தார். அதேநேரத்தில், சங்கக்காரா 404 போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்திருந்திருந்தார். இந்த பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சேஸிங்கில் அதிக அரைசதம்:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் தனிப்பட்ட சாதனையையும் முந்தினார். அதாவது, சேஸிங் செய்யும் போது அதிக முறை 50-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சச்சின் 69 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்யும் போது கோலியின் 70-வது ஒருநாள் அரைசதம் இதுவாகும்.

ALSO READ: யாரென தெரிகிறதா?.. ஆஸி.,யில் இந்திய வீரர்களை பார்த்து ஷாக்கான ஓட்டுநர்!

விராட் கோலியின் முதல் ரன்:


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ரன் எதுவும் அடிக்காமல் டக் அவுட் ஆனார். இதையடுத்து, சிட்னி ஒருநாள் போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்தபோது விராட் கோலியின் கொண்டாட்டம் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. மிட்-விக்கெட்டை நோக்கி ஒரு சிங்கிள் மூலம் முதல் ரன்னை எடுத்தபோது, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் கைதட்டல்களாலும் விசில்களாலும் உற்சாகப்படுத்தினார்.

ALSO READ: காயத்தால் இந்திய அணிக்கு சிக்கல்.. டி20 தொடரில் இருந்து விலகும் நிதிஷ் குமார் ரெட்டி?

2008 ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலியின் வாழ்க்கையில், தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. ஒரு ரன் எடுத்த பிறகு, 36 வயதான கோலி தனது கைகளை மடக்கி நான்-ஸ்ட்ரைக் எண்டில் ரோஹித் சர்மாவிடம் தனது மகிழ்ச்சியை காண்பித்தார்.