Asia Cup Rising Stars 2025: அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எங்கு காணலாம்?
Asia Cup Rising Stars 2025 Semi Final: இந்தியா ஏ மற்றும் வங்கதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், பாகிஸ்தான் ஏ மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி இரவு 8 மணிக்கும் தொடங்கும்.

இந்தியா ஏ - வங்கதேசம் ஏ
தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டி (ACC Mens Asia Cup Rising Stars 2025) இப்போது இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் அடுத்ததாக நடைபெறவுள்ளது. கடினமான போட்டிகளுக்குப் பிறகு, இந்தியா ஏ (India A), பாகிஸ்தான் ஏ, வங்கதேசம் ஏ மற்றும் இலங்கை ஏ ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் டி20 போட்டியின் அரையிறுதிப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி நடைபெறும். அதன்படி, ஒரே நாளில் 2 அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இதற்கான முழு அட்டவணை பட்டியலை தெரிந்து கொள்வோம்.
அரையிறுதி போட்டிகள் எப்போது..? யார் யார் மோதல்..?
- முதல் அரையிறுதியில் இந்தியா ஏ அணியும் வங்கதேச ஏ அணியும் மோதுகின்றன.
- இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் மோதுகின்றன.
- ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸின் இறுதிப் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி நடைபெறும்.
- பைனல் உள்பட இந்த மூன்று போட்டிகளும் தோஹாவில் உள்ள ஈஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
அரையிறுதி போட்டியை எந்த சேனலில் நேரடியாக பார்க்கலாம்?
2025 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் டி20 போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை சோனி லைவ் சேனலில் காணலாம். இந்த போட்டி சோனி லைவ் ஆப் மற்றும் இணையத்தள பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா ஏ மற்றும் வங்கதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், பாகிஸ்தான் ஏ மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி இரவு 8 மணிக்கும் தொடங்கும். இதில், எந்த இரு அணிகள் வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி இரவு 8 மணிக்கு இறுதிப் போட்டியில் மோதும்.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதி அட்டவணை:
- இந்தியா ஏ vs வங்கதேசம் ஏ: 3:00 PM IST – 2025 நவம்பர் 21
- பாகிஸ்தான் ஏ vs இலங்கை ஏ: 8:00 PM IST – 2025 நவம்பர் 21
அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள 4 அணிகளின் முழு விவரம்:
இந்தியா ஏ:
பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹால் வதேரா, நமன் திர், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஷேக் ஷர்மா, சுயாஷ் ஷர்மா.
வங்கதேசம் ஏ:
அக்பர் அலி (கேப்டன்), ஹபிபுர் ரஹ்மான், யாசிர் அலி, ஜீஷன் ஆலம், அரிபுல் இஸ்லாம், ரகிபுல் ஹசன், மஹிதுல் அங்கன், டோபல் அகமது ரெஹான், மிருதுன்ஜோய் சவுத்ரி, மெஹரோப் ஹசன், ரிப்பன் மொண்டோல், அபு ஹிதர் ரோனி, ஷாடின் இஸ்லாம்.
ALSO READ: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
பாகிஸ்தான் ஏ:
இர்பான் கான் (கேப்டன்), யாசிர் கான், முஹம்மது நயீம், முஹம்மது ஃபைக், மஸ் சதாகத், காஜி கோரி, முஹம்மது ஷாஜத், சாத் மசூத், அராபத் மின்ஹாஸ், முபாஷிர் கான், ஷாஹித் அஜீஸ், சுஃப்யான் மொகிம், உபைத் ஷா, முகமது சல்மான், அகமது டேனியல்.
இலங்கை ஏ:
துனித் வெல்லாலகே (கேப்டன்), விஷேன் ஹலம்பகே, நிசான் மதுஷ்கா, லசித் கிருஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், கவிந்து டி லிவேரா, சஹான் ஆராச்சிகே, அஹான் விக்ரமசிங்க, பிரமோத் மதுஷன், கருகா சங்கேத், இசிதா விஜேசுந்தர, மிகன்த் விஜயசுந்தர.