U19 World Cup: சூர்யவன்ஷி, ஆயுஷ் அதிரடி பேட்டிங்.. இலக்கை எளிதாக எட்டி இந்திய அண்டர் 19 அணி வெற்றி!
India U19 vs New Zealand U19: இலக்கை துரத்திய இந்திய அணி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைப்பிடித்தது. தொடக்க வீரராக ஆரோன் ஜார்ஜ் 6 பந்துகளில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே
2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை (ICC Under 19 World Cup 2026) இந்திய அண்டர் 19 அணி மீண்டும் தனது அபாரமான ஆட்டத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில், இந்திய அணி எளிதான வெற்றியைப் பெற முடிந்தது. நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி அட்டகாசம் செய்தது. இதன் பிறகு, நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோரின் அதிரடி இன்னிங்ஸ் இந்திய அணியை எளிதான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.
ALSO READ: சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்.. சிறப்பு சாதனையை படைத்த இந்திய அணி!
மழையால் தடைப்பட்ட சிறிது நேரம் ஆட்டம்:
புலவாயோவில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி மழை காரணமாக தலா 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. மழை ஆரம்பத்தில் ஆட்டத்தைத் தடுத்து, போட்டியைத் தலா 3 ஓவர்கள் குறைத்தது. போட்டி மீண்டும் தொடங்கியது, ஆனால் மழை மீண்டும் ஆட்டத்தை நிறுத்தியது. இதனால் தலா 10 ஓவர்கள் குறைக்கப்பட்டது. பின்னர் இந்திய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக விளையாடி, நியூசிலாந்தை 36.2 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர். நியூசிலாந்தின் பேட்டிங் குறிப்பாக மோசமாக இருந்தது, அடிக்கடி விக்கெட்டுகளை இழந்தது. அணிக்காக கால்லம் சாம்சன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 37 ரன்களையும், செல்வின் சஞ்சயா 28 ரன்களையும் எடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மேனும் 25 ரன்களை கூட தாண்டவில்லை.
இந்திய அணி சார்பில் ஆர்.எஸ். அம்ப்ரிஸ் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். மேலும் கிலான் படேல், முகமது இனான் மற்றும் கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அட்டகாசமாக இலக்கை துரத்திய இந்திய அணி:
For his match-winning spell of 4⃣/2⃣9⃣, Ambrish R.S. is named the Player of the Match as India U19 win by 7⃣ wickets (DLS method) against New Zealand U19 🙌
Scorecard ▶️ https://t.co/tsYh3Rm1eV #U19WorldCup pic.twitter.com/0GqzugTIx0
— BCCI (@BCCI) January 24, 2026
இலக்கை துரத்திய இந்திய அணி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைப்பிடித்தது. தொடக்க வீரராக ஆரோன் ஜார்ஜ் 6 பந்துகளில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்தனர். 2வது விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. வைபவ் சூர்யவன்ஷி 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மத்ரே, 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 அபாரமான சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ALSO READ: அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.. உள்ளே வந்த ஸ்காட்லாந்து.. வங்கதேசத்திற்கு ஏமாற்றம்!
இதன் பின்னர் களமிறங்கிய விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழக்காமல் 17 ரன்களும், வேதாந்த் திரிவேதி ஆட்டமிழக்காமல் 13 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 13.3 ஓவர்களில் (81 பந்துகள்) 3 விக்கெட் இழப்புக்கு இந்த இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.