ICC Test Ranking: முதலிடத்தில் மீண்டும் அரியணை! டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோ ரூட்..!

Joe Root Reclaims No.1 Test Batsman: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த இடத்தை அவர் மீண்டும் பெற்றுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 34வது இடத்திலும், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தரவரிசையில் பின்தங்கியுள்ளனர்.

ICC Test Ranking: முதலிடத்தில் மீண்டும் அரியணை! டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோ ரூட்..!

ஜோ ரூட் - ஜெய்ஸ்வால்

Published: 

16 Jul 2025 19:53 PM

இங்கிலாந்து அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் (Joe Root) மீண்டும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஐசிசி இன்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் ஒரு வாரத்திற்குள் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். மறுபுறம், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) பேட்ஸ்மேன் தரவரிசையில் 34 வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் (Harry Brook) கடந்த 2025 ஜூலை முதல் வாரம் முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்தநிலையில், எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

ALSO READ: அப்படி என்ன பணிச்சுமை..? இந்திய அணியின் வெற்றியே முக்கியம்.. பும்ராவை விளாசிய இர்பான் பதான்! 

இந்தியாவிற்கு எதிராக கலக்கிய ஜோ ரூட்:


இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் ஜோ ரூட் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக தரவரிசையில் ஜோ ரூட் உயர்ந்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில், ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 144 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில், அவர் ஒரு சதம் அடித்தபோது 104 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில், ரூட் 40 ரன்கள் எடுத்த பிறகு அவுட்டானார். அதேநேரத்தில், ஹாரி புரூக் லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களும் அடங்கும்.

கேன் வில்லியம்சன் 2வது இடம்:

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஜோ ரூட் 888 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்திலும், கேன் வில்லியம்சன் 867 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கிய ஹாரி புரூக் 862 மதிப்பீட்டு புள்ளிகளுடன் உள்ளார்.

ALSO READ: வெற்றிலும் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து.. ஸ்லோ ஓவர் ரேட்டிங்.. ஐசிசி அபராதம் விதிப்பு!

கில் – ஜெய்ஸ்வால் சொதப்பல்:

புதிய ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பின் தங்கியுள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் 5 இடங்களுக்குள் இருந்து வெளியேறும் நிலையில், சுப்மன் கில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வெளியேறும் அபாயத்திலும் உள்ளனர்.

புதிய டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய நட்சத்திர பேஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 5வது இடத்திற்கு தள்ளி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். சுப்மன் கில் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு வந்துள்ளார். ரிஷப் பண்ட் புதிய தரவரிசையில் ஒரு இடத்தையும் இழந்துள்ளார். அதாவது, பண்ட் இப்போது 7வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Related Stories
India vs England 4th Test: 43 ஆண்டுகால வறட்சி! சாதிப்பார்களா பும்ரா, சிராஜ்..? ஓல்ட் டிராஃபோர்ட்டில் காத்திருக்கும் சாதனை!
Andre Russell Retirement: வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
India’s No. 3 Test Batsman Crisis: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!
England Faces ICC Fine: வெற்றிலும் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து.. ஸ்லோ ஓவர் ரேட்டிங்.. ஐசிசி அபராதம் விதிப்பு!
Bumrah Performance: அப்படி என்ன பணிச்சுமை..? இந்திய அணியின் வெற்றியே முக்கியம்.. பும்ராவை விளாசிய இர்பான் பதான்!
2027 Odi World Cup: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!