ICC New Rule: கிரிக்கெட்டில் இனிமேல் இந்த ஷாட் நோ! நோ! புதிய விதியை கொண்டு வரும் ஐசிசி!

New ICC Rule for 2025: இன்றைய நவீன கிரிக்கெட்டில் கிரிக்கெட் என்பது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களில் ஆதிக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது. இதன் காரணமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விதிகளை சிலவற்றை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ICC New Rule: கிரிக்கெட்டில் இனிமேல் இந்த ஷாட் நோ! நோ! புதிய விதியை கொண்டு வரும் ஐசிசி!

ஐசிசி புதிய விதி

Published: 

18 Oct 2025 11:52 AM

 IST

கால்பந்துக்கு பிறகு கிரிக்கெட் (Cricket) உலகளவில் அதிக மக்களால் விரும்பப்படும் ஒரு போட்டியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்த கிரிக்கெட், காலத்திற்கு ஏற்ப மாறி ஒருநாள், டி20 இப்போது டி10 என்ற அளவிற்கு முன்னேறிவிட்டது. இதற்கு ஏற்றாற்போல் கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், ​​விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில் மற்றொரு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ஐசிசி (ICC) நடுவர் அனில் சவுத்ரி இந்த விதி குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

என்ன விதி அது..?

புதிய ஐசிசி விதிகளின்படி, பேட்ஸ்மேன் பந்தை விளையாடும்போது ஸ்டம்புகளுக்குப் பின்னால் முழுமையாகச் சென்று விளையாடுவதும், உடலில் எந்த பகுதியும் பிட்ச்சில் இல்லை என்றால், பேட்ஸ்மேன் அடித்த பந்து சிக்ஸே என்றாலும் அது டெட் பால் என்று அறிவிக்கப்படும். இதன் காரணமாக பேட்ஸ்மேனின் அணிக்கு எந்த ரன்களும் வழங்கப்படாது. அதேநேரத்தில், பந்து சட்டப்பூர்வமான பந்து வீச்சாக கருதப்படும், பேட்ஸ்மேன் அவுட் என்றாலும் அவுட்தான்.

ALSO READ: ரெடியா இருங்க.. டி20 உலகக்கோப்பையில் களமிறங்கும் 16 அணிகள்!

பந்துவீச்சாளருக்கு சாதகமான விதியா..?


இன்றைய நவீன கிரிக்கெட்டில் கிரிக்கெட் என்பது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களில் ஆதிக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது. இதன் காரணமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விதிகளை சிலவற்றை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் என மாறும் இதே கிரிக்கெட் உலகில், இத்தகைய கிரிக்கெட் விதிகள் கொண்டு வரப்படுவது பாராட்டுகுரியதாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கீரன் பொல்லார்ட் இந்த ஷாட்டை பலமுறை விளையாடி பார்த்திருப்போம். பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களை தொந்தரவு செய்யவும், பீல்டிங்கை சீர்குலைக்கவும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது, ​​ஒரு பேட்ஸ்மேனின் கால் அல்லது அவரது உடலின் எந்தப் பகுதியும் பிட்ச் மேற்பரப்பைத் தொடவில்லை என்றால், நடுவர் உடனடியாக டெட் பந்து என அறிவிப்பார். இதன் பொருள் பேட்ஸ்மேன் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்தாலும், ரன்கள் கணக்கிடப்படாது.

ALSO READ: 2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் அகமதாபாத்.. பதிவு போட்டு உறுதி செய்த அமித் ஷா!

இருப்பினும், இந்த விதியின் திருப்பம் என்னவென்றால், பந்து வீச்சு சட்டப்பூர்வமானதாகக் கருதப்படும், அதாவது அது ஓவரின் ஒரு பகுதியாகவே இருக்கும். இந்த விதி பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சிறிய நன்மையை அளிக்கிறது, ஏனெனில் பேட்ஸ்மேன்கள் இப்போது தங்கள் நிலையைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த விதி T20, ODI மற்றும் டெஸ்ட் உட்பட அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தும், இது பேட்ஸ்மேன்கள் தங்கள் நுட்பத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கக்கூடும். குறிப்பாக, பேட்ஸ்மேன்கள் T20 வடிவத்தில் இதுபோன்ற ஷாட்களை அடிக்கடி விளையாடுவார்கள்.