மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சர்ச்சை – கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஹர்திக்? ரோகித் காரணமா?

IPL 2026 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது. அந்த அணியின் ரோகித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மறுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் இருந்து விலக முடியவெடுத்ததாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சர்ச்சை - கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஹர்திக்? ரோகித் காரணமா?

ரோகித் சர்மா - ஹர்திக் பாண்ட்யா

Published: 

23 Mar 2026 19:49 PM

 IST

இந்த 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே, மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவர் ஃபீல்டிங் செய்தார்.

ரோகித் சர்மாவின் கோரிக்கை

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரு கேப்டனை இப்படியா பயன்படுத்துவது என அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.  இந்த நிலையில் ஐபிஎல் 2026 சீசனில் தன்னை முழுமையாக ஃபீல்டிங்கிலும் பயன்படுத்த வேண்டும் என ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் மேனேஜ்மென்ட்டிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IPL 2026: அறிமுகமான முதல் பந்திலேயே சிக்ஸர்.. ஐபிஎல்லில் படைக்கப்பட்ட அரிய சாதனை..!

மேலும் தான் தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் மட்டுமே விளையாடி வருகிறேன். என் ஃபிட்னஸ் மேம்பட ஒவ்வொரு போட்டியிலும் ஃபீல்டிங்கிலும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இதற்காக ஹர்திக் பாண்ட்யாவை நீக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் மேனேஜ்மென்ட்டிடம் ஹர்திக் பாண்ட்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்ட்யா, அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு தனது நலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அணியில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முழுநேர பேட்ஸ்மென்கள், சூர்யகுமார் யாதவ் அணியின் மிக முக்கிய வீரர். அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த முடியாது. அதனால் ரோகித் சர்மாவை அந்த ரோலில் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது என ஹர்திக் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததாக கூறப்படுகின்றன.

இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் பர்ப்பிள் கேப்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்சி மாறுமா?

இந்த நிலையில் ரோகித் சர்மாவை சீசன் முழுவதும் தொடர்ந்து ஃபீல்டிங்கில் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில் மும்பை இந்தியன்ஸ் மேனேஜ்மென்ட் உறுதியாக இருப்பதாகவும், இதற்காக ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியில் இருந்து விலக தயாராக உள்ளதாக தெரிவித்தகாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..