PBKSvGT : பஞ்சாப் கிங்க்ஸ்க்கு எதிராக 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்

IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்க்ஸ்க்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 163  ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.  இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி ஆடி வருகிறது.

PBKSvGT : பஞ்சாப் கிங்க்ஸ்க்கு எதிராக 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்

Pbks Vs Gt

Updated On: 

31 Mar 2026 22:14 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்க்ஸ்க்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 163  ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் நியூ சண்டிகரில்  நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 162/6 என்ற மதிப்பிற்குள் கட்டுப்படுத்தியது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும், அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் போனது.

மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள்

குஜராத் அணிக்காக கேப்டன்  சுப்மன் கில் நிதானமாக ஆடி  27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோஸ் பட்லர் இணைந்து அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தாலும், அவர்கள் அவுட்டான பிறகு அணியின் ரன் வேகம் குறையத் தொடங்கியது. சாய் சுதர்சன் 13 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதையும் படிக்க : IPL 2026: நேருக்கு நேர் மோதலில் சமநிலை.. பஞ்சாப் vs குஜராத்! வெற்றி யாருக்கு?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்பாடு

 

அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் டிவாதியா ஆகியோர் எதிர்பார்த்த அளவில் விளையாடாததால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை விஜயகுமார் வைஷாக் 3 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக பங்காற்றினார். யுஷ்வேந்திரா சாஹல் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார். மார்கோ ஜான்சன் ன் பங்குக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல்லில் இதுவரை 3 போட்டிகளும் ஒரே மாதிரி.. வெறுப்படையும் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அர்ஷ்தீப் சிங்கின் மோசமான சாதனை

இந்த போட்டியின் முக்கிய அம்சமாக அர்ஷ்தீப் சிங் பெயர் பேசப்பட்டது. கடைசி ஓவரில் 11 பந்துகள் வீசிய அவர், 4 வைட்கள் மற்றும் 1 நோ பால் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் நீளமான ஓவரை ஒன்றை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் விரும்பத்தகாத சாதனையையும் சேர்த்துக் கொண்டார். மொத்தத்தில், குஜராத் அணி நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாத நிலையில், பஞ்சாப் அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சு போட்டியின் திசையை மாற்றியமைத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் ஆடி வருகிறது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..