MS Dhoni : பந்துவீச்சாளராக தோனி? வலைப்பயிற்சியில் பிராக்டிஸ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
IPL 2026 : ஐபிஎல் 2026 சீசன் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் இன்னும் வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

தோனி
சிஎஸ்கே ரசிகர்கல் எதிர்பார்த்து காத்திருக்கும் சம்பவம் நடக்க வாய்புளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் எப்போதும் ஜொலிக்கும் தோனி, தற்போது பந்துவீச்சுடன் களத்தில் காணப்படுவதால், “தோனி ஒரு பேட்ஸ்மேன் இல்லையா… பந்துவீச்சாளராக வருகிறாரா?” என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
மே 10 அன்று நடைபெறும் தங்களின் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, எம்.எஸ். தோனி வலைப்பயிற்சி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக பேட்டிங் பயிற்சி செய்யும் தோனி, இம்முறை குறைந்த ரன்-அப்புடன் சுழற்பந்து வீசுவது காணப்பட்டது. தோனி புன்னகையுடனும் வேடிக்கையுடனும் பந்து வீசும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் அவர் வேடிக்கைக்காக மட்டும்தான் பந்து வீசினாரா? அல்லது அவர் உண்மையிலேயே ஒரு பந்துவீச்சாளராகக் களமிறங்குவாரா? என்பது இப்போது சுவாரஸ்யமாகியுள்ளது.
Also Read: ஐபிஎல் 2026ல் மீண்டும் அதிர்ச்சி.. புகை பிடித்த சர்ச்சையில் சிக்கிய சஹால்.. வைரலாகும் வீடியோ!
விளையாடாததற்கு இதுதான் உண்மையான காரணமா?
இந்த சீசனில் இதுவரை தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாததற்கு உடற்தகுதிப் பிரச்சினைகளே முக்கியக் காரணம் என்று தெரிகிறது. முழங்கால் பிரச்சினை காரணமாக தோனியால் வேகமாக ஓட முடியவில்லை என்றும், அதனால்தான் அவர் இறுதி அணியில் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்திருந்தாலும், ஒரு முழுப் போட்டியில் விளையாட அவர் தயாராக இல்லை. லக்னோவுக்கு எதிரான போட்டியின் நாளிலாவது தோனி களத்திற்கு வருவார் என்று சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வீடியோ
MS Dhoni bowling in nets 💛 🔥
– Waiting for the return in Yellow Army. pic.twitter.com/YagPPv3zjV
— Johns. (@CricCrazyJohns) May 7, 2026
சிஎஸ்கே-வின் பிளேஆஃப் வாய்ப்புகள்
ஐபிஎல் 2026 தொடரில் ஏற்கனவே 50 போட்டிகள் விளையாடப்பட்டுவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று, தற்போது புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்த போதிலும், அவர்கள் மீண்டு வந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். பிளேஆஃப் போட்டியில் நீடிக்க, சென்னை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும். இத்தகைய ஒரு முக்கியமான நேரத்தில் தோனியின் வருகை, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீச்சுப் பயிற்சியாளர் என்ன சொன்னார்?
தோனியின் மீள்வருகை குறித்து பதிலளித்த சென்னை பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ், அவர் எப்போது திரும்புவார் என்பதற்குத் தெளிவான தேதி எதுவும் இல்லை என்று தெரிவித்தார். தாங்கள் தோனியின் உடற்தகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் தயாரானதும் அணியில் அவரை இணைப்போம் என்றும் அவர் கூறினார்.