IndvsZim : மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் – வெளியான அறிவிப்பு

T20 World Cup : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IndvsZim : மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் - வெளியான அறிவிப்பு

இலவச மெட்ரோ பயணம்

Published: 

26 Feb 2026 15:24 PM

 IST

சென்னை, பிப்ரவரி 26 : இந்தியா –  ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியை முன்னிட்டு ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலவச பயண வசதியை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தரவுள்ளனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் நிர்வாக இலசவ பயண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இலவச மெட்ரோ பயணம்

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டெட் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 26, 2026 அன்று மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். போட்டிக்கான டிக்கெட்டில் இடம் பெற்றுள்ள கியூஆர் கோடை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்தால் போதும் அது மெட்ரோ பணசீட்டாக செயல்படும்.

இதையும் படிக்க : IndvsZim : மீண்டும் இந்திய அணியில் இணையும் ரிங்கு சிங்? இந்திய பயிற்சியாளர் தகவல்

சென்னை மெட்ரோவின் அறிவிப்பு

 

இந்தியா – ஜிம்பாப்வே போட்டிக்கான ஒவ்வொரு டிக்கெட்டையும் எந்த மெட்ரோ நிலையத்தில் இருந்தும் , சேப்பாக்கத்திற்கு அருகில் உள்ள கவர்மெண்ட் எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் வரை ஒருமுறை சென்று வருவதற்கான ரவுண்ட் டிரிப் பயணத்திற்கு செல்லுபடியாகும். மேலும், போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் மெட்ரோ சேவைகள் வழக்கமான நேரத்தை விட நீட்டிக்கப்ப்டடுள்ளது. குறிப்பாக கவர்மெண்ட் எஸ்டேட் நிலையத்தில் இருந்து கடைசி ரசியல்கள் 12மணிக்கு இயக்கப்படும்.

இதையும் படிக்க : ரோஹித் சர்மாவின் ஆல் டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா!

இந்த கடைசி மெட்ரோ ரயில் கவர்மென்ட் எஸ்டேட்டில் இருந்து விம்கோ நகர் நோக்கியும், விமான நிலையத்திற்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மார்க்கமாக செல்லும் பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைசி ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே நிலைய நுழைவு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்லது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து ரசிகர்களுக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?
மகனுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா