Rohit Sharma: விருது விழாவில் தோனியை போல் மிமிக்ரி.. குலுங்கி குலுங்கி சிரித்த ரோஹித் சர்மா.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!
Rohit Sharma Enjoying MS Dhoni's Mimicry: CEAT விருது நிகழ்ச்சிக்கு ரோஹித் சர்மா வந்தார். இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில சிறப்பு விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தோனியின் குரல் அவரது காதுகளில் வந்தவுடன், ரோஹித் சர்மா சிரிக்கத் தொடங்கினார்.

ரோஹித் சர்மா
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா (Rohit Sharma) மீண்டும் இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார். இந்திய அணி 2025 அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் (Ind vs Aus) மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றனர். இந்தநிலையில், சமீபத்தில் ரோஹித் சர்மா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
ரோஹித் சிரித்த வீடியோ:
Rohit Sharma enjoying MS Dhoni’s mimicry. 🤣pic.twitter.com/09UD5jUDuJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 8, 2025
2025 அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற CEAT விருது வழங்கும் விழாவில் ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் கேன் வில்லியம்சன், டெம்பா பவுமா ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு வீடியோவில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சத்தமாக சிரித்தது இணையத்தில் கலக்கி வருகிறது.
ALSO READ: மொத்தம் 8 போட்டிகள்! இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்த விருது வழங்கும் விழாவில் மிமிக்ரி கலைஞர் ஷரங் ஷிரிங்கர்பூர் சில முன்னாள் வீரர்களை போல் பேசினார். இதன்போது, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, டேனி மோரிசன் மற்றும் ரிக்கி பாண்டிங்கை போல் துல்லியமாக பேசினார். அந்தவகையில், தோனியை போல் சரியான உச்சரிப்பையும் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரோஹித் சர்மா சத்தமாக சிரித்தார்.
தோனி – ரோஹித் நட்பு:
மகேந்திர சிங் தோனிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் ஒரு தனித்துவமான நட்பு உள்ளது. ஏனென்றால், ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக கொண்டு வந்தது தோனிதான். ரோஹித் சர்மா ஆரம்பத்தில் 5-6 இடங்களில் களமிறங்கி விளையாடினார். 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரோஹித்தின் திறனை கண்டு 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார். மேலும், ரோஹித் தோனியிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டார்.
ALSO READ: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?
CEAT விருது நிகழ்ச்சிக்கு ரோஹித் சர்மா வந்தார். இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில சிறப்பு விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தோனியின் குரல் அவரது காதுகளில் வந்தவுடன், ரோஹித் சர்மா சிரிக்கத் தொடங்கினார். ரோஹித் சர்மாவால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. ரோஹித்தின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.