Bumrah’s Yorker Stunner: ராக்கெட்டை போல நறுக்கென யார்க்கர்.. யுஏஇ தொடக்க வீரரை தூக்கிய பும்ரா!
Jasprit Bumrah's Asia Cup Return: 2025 ஆசியக் கோப்பையின் துவக்கப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான யார்க்கர் வீசி அசத்தினார். காயத்திலிருந்து மீண்டு களமிறங்கிய பும்ரா, 10 பந்துகளுக்குள் விக்கெட் வீழ்த்தி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜஸ்பிரித் பும்ரா
2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிராக துபாயில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) களமிறங்கிய முதல் போட்டியிலே தனது யார்க்கர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய பும்ரா, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியின் முதல் போட்டியில், பும்ரா வெறும் 10 பந்துகளுக்குள் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது, பும்ராவின் இந்த யார்க்கர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
களத்தில் சீறிய பும்ரா:
Jasprit Bumrah and knocking stumps over — name a better combo 💥
Watch #DPWORLDASIACUP2025 – LIVE on #SonyLIV & #SonySportsNetwork TV Channels 📺#AsiaCup #INDvUAE pic.twitter.com/q3wrec57d2
— Sony LIV (@SonyLIV) September 10, 2025
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அதாவது 2025 செப்டம்பர் 10ம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது. 47 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கிய ஜஸ்பிரித் பும்ராவை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதற்கு காரணம், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் கடைசி போட்டியில் விளையாட முடியவில்லை. அப்போதிலிருந்து, 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, யுஏஇக்கு எதிராக சாகசம் புரிந்தார்.
பும்ராவால் முன்பு போலவே அதே நேர்த்தியான பந்தை வீச முடியுமா என்று கேள்வி எழுந்தது. அப்போதுதான், பும்ரா தனது திறமையைக் காட்ட அதிக நேரம் எடுக்கவில்லை. பும்ரா தான் வீசிய ரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் ஏவுகணையை போல வேகமாகவும், துல்லியமாகவும் யார்க்கரை வீசி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொடக்க வீரர் அலிஷான் ஷராஃபுக்கு பின்னால் இருந்த பந்தை தெறிக்கவிட்டார்.
ஒரு வருடத்திற்கு பிறகு..
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, பும்ரா முதல் முறையாக 2025 ஆசிய கோப்பையில் டி20 வடிவத்தில் இந்திய அணிக்காக விளையாடினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிராக பும்ரா விக்கெட் வீழ்த்தியதன்மூலம், புவனேஷ்வர் குமாரையும் சமன் செய்தார். பும்ரா டி20 போட்டியில் 71 போட்டிகளில் 90 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர்குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் பும்ரா பவர்பிளேயில் தொடர்ச்சியாக 3 ஓவர்கள் வீசினார். பும்ராவின் வாழ்க்கையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பவர்பிளேயில் தொடர்ச்சியாக 3 ஓவர்கள் வீசிய ஒரு நாள் வந்தது. தற்செயலாக, இதற்கு முன்பும் அவர் 2016 டி20 உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக இதைச் செய்திருந்தார்.