2025 Women’s Cricket World Cup: உலகக் கோப்பையை நடத்தும் உரிமை பறிப்பா..? போராடும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

M Chinnaswamy Stadium Bengaluru: 2025 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் சில பெங்களூருவில் நடைபெறவிருந்தன. ஆனால், ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பின் ஏற்பட்ட துயர சம்பவத்தின் காரணமாக, பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை.

2025 Womens Cricket World Cup: உலகக் கோப்பையை நடத்தும் உரிமை பறிப்பா..? போராடும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்

Published: 

13 Aug 2025 11:04 AM

2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையானது (2025 Women’s Cricket World Cup) வருகின்ற 2025 செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 அணிகளுக்கு இடையே 31 போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படும் இந்த போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். வெளியிடப்பட்ட அட்டவணையில், பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium Bengaluru) 5 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் கிரிக்பஸின் அறிக்கையின்படி, இப்போது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறாது என கூறப்படுகிறது.

போட்டி அட்டவணையில் மாற்றமா..?

கிரிக்பஸ் அறிக்கையின்படி, 2025 ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையின் அட்டவணையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இன்னும் கர்நாடக அரசிடமிருந்து அனுமதி பெறவில்லை.

ALSO READ: உள்நாட்டு தொடரின் சிக்கலில் கோலி, ரோஹித்.. கட்டாயப்படுத்தும் பிசிசிஐ.. விரைவில் ஓய்வா..?

2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், பெங்களூருவில் நடைபெறவிருந்த போட்டிகளை இப்போது திருவனந்தபுரத்தில் நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லீக் கட்டத்தில் இந்தியா இங்கு 2 போட்டிகளில் விளையாடும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி இந்தியா – இலங்கை இடையிலான போட்டியும், வருகின்ற 2025 அக்டோபர் 26ம் தேதி இந்தியா – வங்கதேசம் இடையிலான போட்டியும் திட்டமிடப்பட்டது. இருப்பினும், அட்டவணை மற்றும் ஸ்டேடியத்தில் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டிகள் ஏன் எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறாது?


கடந்த ஐபிஎல் 2025 சீசனில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் மறுநாள் பெங்களூருவை அடைந்தனர். அங்கு எம் சின்னசாமி மைதானத்தில் அவசரமாக கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டிக்கெட்டுகள் இலவசம், தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அதன் பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.

ALSO READ: Asia Cup 2025: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?

துயர சம்பவம்:

அப்போதிருந்து, கர்நாடக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகவும் கடுமையாக மாறியுள்ளது. முன்னதாக பெங்களூரு மற்றும் கொழும்பு அணிகள் 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அதாவது, பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால், 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றிருக்கும். ஆனால், அட்டவணையில் எந்த அதிகாரப்பூர்வ மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.