BCCI New Rule: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய விதி.. பிசிசிஐ முடிவுக்கு காரணம் என்ன..?

India Domestic Cricket: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மாற்று வீரர் சர்ச்சையைத் தொடர்ந்து, பிசிசிஐ 2025-26 உள்நாட்டு சீசனில் புதிய மாற்று விதியை அறிமுகப்படுத்துகிறது. படுகாயமடைந்த வீரருக்குப் பதிலாக, அதே திறமை கொண்ட வீரரை மாற்ற அனுமதிக்கப்படும்.

BCCI New Rule: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய விதி.. பிசிசிஐ முடிவுக்கு காரணம் என்ன..?

ரிஷப் பண்ட்

Published: 

17 Aug 2025 08:15 AM

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி (ICC) மாற்று விதியானது அதிகம் பேசப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்த போதிலும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் காயமடைந்த போதிலும் மாற்று விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்த சிக்கலில் இருந்து விடுபட ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, வரவிருக்கும் இந்திய உள்நாட்டு போட்டிகளில் இருந்து புதிய மாற்று விதிகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்தநிலையில், இது என்ன விதிகள்…? இது எப்போது முதல் அமலுக்கு வருகிறது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

புதிய மாற்று விதியை கொண்டு வரும் பிசிசிஐ:


2025-26 உள்நாட்டு சீசன் முதல் ரெட்-பால் போட்டிகளில் பிசிசிஐ புதிய விதியை அமல்படுத்துகிறது. புதிய விதியின்படி, படுகாயமடைந்த வீரருக்கு இணையான மாற்று வீரர் அனுமதிக்கப்படுவார். இந்த விதி ஐசிசியின் மூளையதிர்ச்சி மாற்று விதிக்கு பொருந்துகிறது. இதையடுத்து, அகமதாபாத்தில் ஒரு நடுவர் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய விதியை அமல்படுத்துவது குறித்து நடுவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிசிசிஐ அரசியல் காரணமாக கோலி, ரோஹித் ஓய்வா..? முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு!

சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி உள்ளிட்ட பிற வெள்ளை பந்து போட்டிகளில் இந்த விதி இப்போதைக்கு பயன்படுத்தப்படாது. அதேநேரத்தில், இந்த மாற்று விதி ஐபிஎல் 2026 க்கு அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால் புதிய மாற்று விதி 19 வயதுக்குட்பட்ட சிகே நாயுடு டிராபியிலும் செயல்படுத்தப்படும், இது சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடப்பட உள்ளது.

ALSO READ: 2025 ஆசியக் கோப்பையில் பும்ரா களமிறங்குவாரா..? பிசிசிஐ முடிவு என்ன..?

விதிகள் கூறுவது என்ன..?

  • புதிய விதிகளின்படி, லைக் ஃபாக் லைக் ரீப்ளேஸ்மென்ட் மட்டுமே அனுமதிக்கப்படும். டாஸுக்கு முன் வீரர்களின் பட்டியல் வழங்கப்படும். மாற்றாக வரும் வீரர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது முக்கியம்.
  • மருத்துவர்கள் மற்றும் நடுவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே, ஒரு வீரரை மாற்றலாமா வேண்டாமா என்பதை போட்டி நடுவர் முடிவு செய்வார்.
  • அணியில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் இல்லையென்றால், டாஸ் போடும் போது கொடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாத ஒரு வீரரை விக்கெட் கீப்பருக்கு மாற்றாக நியமிக்கலாம்.
  • காயமடைந்து மாற்றாக வரும் வீரரின் வாழ்க்கைப் பதிவில் அந்தப் போட்டி சேர்க்கப்படும்.