Next BCCI President: பிசிசிஐ தலைவருக்கு 3 முக்கிய நிர்வாகிகள் போட்டி.. தேர்தல் எப்போது..? BCCI செயலாளர் விளக்கம்!

BCCI New President 2025: ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, பிசிசிஐயின் புதிய தலைவர் தேர்வு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. ராஜீவ் சுக்லா, ராகேஷ் திவாரி, சஞ்சய் நாயக் உள்ளிட்ட பலர் முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர். பிசிசிஐயின் அடுத்த பொதுக் கூட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Next BCCI President: பிசிசிஐ தலைவருக்கு 3 முக்கிய நிர்வாகிகள் போட்டி.. தேர்தல் எப்போது..? BCCI செயலாளர் விளக்கம்!

பிசிசிஐ

Published: 

06 Sep 2025 16:10 PM

 IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய தலைவர் யார் என்பதை தொடர்ந்து, பல முக்கிய பதவிகளின் புதிய நியமனங்கள் இருக்கலாம் என்பதால் இது தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது, பிசிசிஐ விதிகளின்படி, ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதால், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கடந்த 2025 ஜூலை மாதம் விலகினார். இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிசிசிஐ புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்து எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2022ம் ஆண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி (Roger Binny) பிசிசிஐயின் 40வது தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன், சவுரவ் கங்குலி 2019-2022 வரை தலைவர் பதவியை வகித்தார். இப்போது பிசிசிஐயின் 41வது தலைவராக யார் பதவி ஏற்பார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தநிலையில், பிசிசிஐயின் அடுத்த தலைவராக யார் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

பிசிசிஐ அடுத்த தலைவர் யார்..?

  • ராஜீவ் சுக்லா

ராஜீவ் சுக்லாவுக்கு கிரிக்கெட் நிர்வாகத்திலும், அரசியலிலும் பல வருட அனுபவம் உள்ளது. ராஜீவ் சுக்லா கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐயின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, இன்று வரை இந்த பதவியில் வகித்து வருகிறார். கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அரசியலில் அவரது பரந்த அனுபவம் அவரை பிசிசிஐ தலைவர் பதவிக்கு மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறது.

  • ராகேஷ் திவாரி

பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக ராகேஷ் திவாரியும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகக் கருதப்படுகிறது. ராகேஷ் திவாரி கடந்த 2019 முதல் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். அரசியல் மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்திலும் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. இவருக்கு இந்த பதவிக்கு முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

  • சஞ்சய் நாயக்

சஞ்சய் நாயக் தற்போது மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார். மாநில அளவில் அவரது பணி மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்து வருகிறது. கிரிக்கெட் நிர்வாகத்தில் அவரது பின்னணி மற்றும் அனுபவம், அவர் பிசிசிஐ தலைவராகும் வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது.

பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா


பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா பிசிசிஐ தலைவருக்கான தேர்தல் எப்போது என்ற முடிவை எப்போது எடுப்போம் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், “புதிய பிசிசிஐ தலைவர் வருகின்ற 2025 செப்டம்பர் 28 அன்று மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார். பிசிசிஐ அரசியலமைப்பின்படி, செப்டம்பர் இறுதிக்குள் ஆண்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.” என்றார்.