Asia Cup 2025: பாபர் அசாமை எடுக்காத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த பயிற்சியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Babar Azam Omission: 2025 ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீரரான பாபர் அசாமுக்கு இடம் இல்லை. பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், பாபர் அசாமின் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் மேம்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Asia Cup 2025: பாபர் அசாமை எடுக்காத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த பயிற்சியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாபர் அசாம்

Published: 

18 Aug 2025 08:09 AM

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 17ம் தேதி 2025க்கான பாகிஸ்தான் அணியை (Pakistan Cricket Team) அறிவித்தது. இந்த பாகிஸ்தான் அணியில் பல முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் பாபர் அசாமுக்கு (Babar Azam) இடம் பிடிக்கவில்லை. இந்தநிலையில், ஆசிய கோப்பை 2025 அணியை அறிவிக்கும் போது, பாகிஸ்தானின் வெள்ளை பந்து தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், பாபர் அசாமை பாகிஸ்தான் அணியில் ஏன் சேர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

ALSO READ: விளையாட வரும் பும்ரா.. உடற்தகுதி பெற்ற சூர்யகுமார் யாதவ்.. வலுவான இந்திய அணி தயார்!

ஏன் பாபர் அசாமுக்கு இடமில்லை..?

2025 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டபோது, பாகிஸ்தானின் வெள்ளை பந்து தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர் சந்திப்பில், “பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம்சில பகுதிகளில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பது முக்கியம். மேலும், தனது ஸ்ட்ரைக் ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். அவர் கடினமாக உழைத்து தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்பது எனக்குத் தெரியும். பாபர் போன்ற ஒரு வீரருக்கு பிக் பாஷ் லீக்கில் விளையாட வாய்ப்பு உள்ளது, மேலும் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது சில பகுதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் பாபர் அசாம்:


கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான டி20 வடிவத்தில் பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் 122.91 ஆக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக குறைந்தது 1000 பந்துகளை எதிர்கொண்ட 20 பேட்ஸ்மேன்களில் பாபரின் ஸ்ட்ரைக் ரேட் மிக மோசமானது. பாபர் அசாம் கடந்த 2024 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 சீசனில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாபர் விளையாடினார், அதில் அவர் மொத்தம் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாபர் அசாம் சிறிது காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பெரிய ஸ்கோரை எடுக்க தவறிவிட்டார், இதன் காரணமாக 2025 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அசாமுக்கு இடம் கிடைக்கவில்லை.

பாபர் அசாமின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் பாகிஸ்தானுக்காக 128 போட்டிகளில் 36 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் உள்பட 4223 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்கள் ஆகும்.

ALSO READ: பாபர், ரிஸ்வான் நீக்கம்! இளம் வீரர் தலைமையில் களமிறங்கும் இறங்கும் பாகிஸ்தான் அணி!

2025 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சஹிப்சாதா அஹுப்ஹான், அப்ரிடி மற்றும் சுஃபியன் முகிம்.