IND vs AUS 3rd T20: 3வது டி20யில் மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!
IND vs AUS 3rd T20 Highlights: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் எடுத்தது, இந்தியா ஒன்பது பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியா – இந்தியா (IND vs AUS) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 கணக்கில் சமன் செய்தது. ஹோபார்ட்டில் உள்ள பெல்லெரிவ் ஸ்டேடியத்தில் நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இந்திய அணி சார்பில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
ALSO READ: 5 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
186 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிம் டேவிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அரைசதங்கள் அடித்திருந்தனர். அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வாஷிங்டன் சுந்தரின் அற்புதமான பேட்டிங்:
Game. Set. Done ✅
Washington Sundar (49*) and Jitesh Sharma (22*) guide #TeamIndia to a 5-wicket victory in Hobart. 🙌
Scorecard ▶https://t.co/X5xeZ0LEfC #AUSvIND | @Sundarwashi5 | @jiteshsharma_ pic.twitter.com/gRXlryFeEE
— BCCI (@BCCI) November 2, 2025
அபிஷேக் சர்மா மீண்டும் ஒருமுறை அதிரடியாக தொடக்கத்தை அளித்து 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதற்கிடையில், சுப்மான் கில்லின் மோசமான ஃபார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 24 ரன்களும், திலக் வர்மா 29 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்ததாக உள்ளே வந்த அக்சர் படேலும் 17 ரன்களுக்குப் பிறகு வெளியேறினார்.
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தபோது இந்தியா 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பிறகு, அதிரடியாக பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். மறுமுனையில், ஜிதேஷ் சர்மா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன.
ALSO READ: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஜாக்பாட்! கோடியை அள்ளப்போவது இந்தியாவா..? தென்னாப்பிரிக்காவா..?
ஹோபார்ட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வி:
ஆஸ்திரேலியா இதற்கு முன்பு ஹோபார்ட்டின் பெல்லெரிவ் ஸ்டேடியத்தில் 5 டி20 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை 2 முறையும், இங்கிலாந்து அணியை 2 முறையும், பாகிஸ்தானை ஒரு முறையும் தோற்கடித்துள்ளனர். இருப்பினும், ஆஸ்திரேலிய அணியை இங்கு தோற்கடித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.