Virat Kohli: சிட்னி ஒருநாள் போட்டியுடன் விராட் கோலி ஓய்வா..? இணையத்தில் கிளம்பும் பகீர் தகவல்!

Virat Kohli Retirement: அடிலெய்டு ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது விராட் கோலி கையை உயர்த்தியதுதான் அவரது ஓய்வு குறித்து விவாதிக்கப்படுவதற்கான ஒரு காரணம். அப்போது, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எழுந்து நின்று கோலிக்கு மரியாதை செலுத்தினர்.

Virat Kohli: சிட்னி ஒருநாள் போட்டியுடன் விராட் கோலி ஓய்வா..? இணையத்தில் கிளம்பும் பகீர் தகவல்!

விராட் கோலி

Published: 

24 Oct 2025 18:41 PM

 IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் (IND vs AUS) மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி 2ல் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli)  ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்படி, விராட் கோலி முதல் போட்டியில் 8 பந்துகளிலும், இரண்டாவது போட்டியில் 4 பந்துகளிலும் விளையாடிய பிறகு அவர் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடிலெய்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்ததிலிருந்து, அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் பரவலாகி வருகின்றன. சிட்னி ஒருநாள் போட்டியிலிருந்து அவரது ஓய்வு குறித்த தலைப்பு சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. விராட்டின் ஓய்வு குறித்த ஊகங்கள் ஏன் வேகமெடுக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

கோலியின் ஓய்வு பற்றி ஏன் பேசப்படுகிறது?


அடிலெய்டு ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது விராட் கோலி கையை உயர்த்தியதுதான் அவரது ஓய்வு குறித்து விவாதிக்கப்படுவதற்கான ஒரு காரணம். அப்போது, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எழுந்து நின்று கோலிக்கு மரியாதை செலுத்தினர். அந்த நேரத்தில் கோலி எதார்த்தமாக இதை  செய்தாரா அல்லது இந்த சைகை மூலம் ஓய்வு பெறுவதை அவர் சூசகமாகக் குறிப்பிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விராட் கோலியின் இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது அடிலெய்டு ஒருநாள் போட்டியில் இருந்து வைரலாகும் புகைப்படம் அவரது ஒருநாள் போட்டி ஓய்வை பற்றி பேச அதிக காரணமாக மாறியது.

ALSO READ: தொடர்ச்சியாக டக் அவுட்.. விராட் கோலிக்கு அழுத்தமா? – பதான் கேள்வி!

விராட் கோலி குறித்து சுனில் கவாஸ்கர்:

விராட் கோலியின் கை அசைவு பல கடுமையான கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து தனது கருத்துகளை தெரிவித்த சுனில் கவாஸ்கர், “விராட் கோலி 14,000 ஒருநாள் ரன்கள், 51 சதங்கள் மற்றும் 31 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் ஆயிரக்கணக்கான ரன்களையும் எடுத்துள்ளார். இரண்டு முறை டக் அவுட்டான காரணத்திற்காக அவரை அதிகம் விமர்சிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது.” என்றார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் 14,181 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் இவர்தான். கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 73 அரைசதங்கள் அடித்துள்ளார்.