RO-KO Records: சிட்னியில் சின்னாபின்னமான சாதனைகள்.. மாபெரும் ரெக்கார்ட்ஸை படைத்த ரோஹித் – கோலி!

Rohit Sharma and Virat Kohli Records: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தது. ரோஹித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் மற்றும் ரோஹித்தின் சிறப்பான இன்னிங்ஸால் இந்திய அணி 237 ரன்கள் இலக்கை 69 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது.

RO-KO Records: சிட்னியில் சின்னாபின்னமான சாதனைகள்.. மாபெரும் ரெக்கார்ட்ஸை படைத்த ரோஹித் - கோலி!

ரோஹித் சர்மா - விராட் கோலி

Published: 

26 Oct 2025 08:30 AM

 IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தாலும் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலியின் (Virat Kohli) ஆட்டமிழக்காத 168 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தது. ரோஹித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் மற்றும் ரோஹித்தின் சிறப்பான இன்னிங்ஸால் இந்திய அணி 237 ரன்கள் இலக்கை 69 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது. இருவரும் இணைந்து ஏராளமான சாதனைகளை முறியடித்தனர்.

ரோஹித் – விராட் முறியடித்த 7 பெரிய சாதனைகள்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த சதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவரது 9வது சதமாகும். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 9 ஒருநாள் சதங்களையும், விராட் கோலி 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர்.. விராட் கோலி படைத்த புதிய வரலாறு!

ஒரு தொடக்க வீரராக அதிக சதங்கள்:

ரோஹித் சர்மா இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக 45 சதங்களை அடித்துள்ளார். அதன்படி, ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கரை (45) சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த சாதனை டேவிட் வார்னரின் வசம் உள்ளது. வார்னர் இதுவரை 49 சதங்களை அடித்தார்.

ரோஹித்-கோலி 100+ பார்ட்னர்ஷிப்கள்:


விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 19 முறை 100+ பார்ட்னர்ஷிப்களை அடித்துள்ளனட். 100+ பார்ட்னர்ஷிப்கள் கொண்ட ஜோடிகளில், ரோஹித் மற்றும் கோலி இப்போது திலகரத்ன தில்ஷன் மற்றும் குமார் சங்கக்காரா (20) மற்றும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி (26) ஆகியோருக்குப் பின்னால் உள்ளனர்.

சேஸிங் செய்யும் போது அதிக 50+ ஸ்கோர்கள்:

விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆனார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது அவரது 70வது அரைசதம் ஆகும். அதேநேரத்தில், சச்சின் டெண்டுல்கரின் 69 அரை சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்:

விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உருவெடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் 74 ரன்கள் எடுத்ததன் மூலம், விராட் கோலி குமார் சங்கக்காரவை (14,234) முந்தினார். இப்போது, கோலி 14,255 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில்,  சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள்:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்து 50 சதங்கள் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (100 சதங்கள்) மற்றும் விராட் கோலி (82) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

ALSO READ: ரோஹித் சதம்.. கோலி அரைசதம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒன்றாக விளையாடியவர்கள் என்ற அடிப்படையில், ரோஹித் சர்மாவும் விராட் கோலியும், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்துள்ளனர். இது விராட் மற்றும் ரோஹித்தின் 391வது சர்வதேச போட்டியாகும். அதேநேரத்தில், சச்சின் மற்றும் டிராவிட்டும் 391 போட்டிகளில் ஒன்றாக விளையாடி சாதனை படைத்துள்ளனர்.