IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக வலுவான டீம்.. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

Australia's ODI squad: மிட்செல் மார்ஷ் தலைமையில் ஒருநாள் தொடருக்கான 15 வீரர்களை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. டி20 தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2025 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய டி20 தொடர் மிக முக்கியமானது.

IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக வலுவான டீம்.. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

Published: 

07 Oct 2025 11:32 AM

 IST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி (IND vs AUS) இன்று அதாவது 2025 அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆஸ்திரேலிய அணிகளும் கேப்டனாக மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவும் (Indian Cricket Team) ஆஸ்திரேலிய அணியும் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி தற்போது ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான தங்களது அணியை அறிவித்துள்ளது. சமீபத்தில் டி20 போட்டிகளில் இருந்த ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புகிறார். அதன்படி, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்த பிறகு ஸ்டார்க் விளையாடும் முதல் வொயிட் பால் தொடர் இதுவாகும். ஸ்டார்க்கைத் தவிர, மேட் ரென்ஷாவும் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் இன்னும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 வீரர்கள் நீக்கம்:


மிட்செல் மார்ஷ் தலைமையில் ஒருநாள் தொடருக்கான 15 வீரர்களை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. டி20 தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஒப்பிடும்போது இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் 5 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் இருந்து ஆரோன் ஹார்டி, மேத்யூ குன்ஹெமன் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகிய 3 வீரர்கள் நீக்கப்பட்டு, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஓவன், மேட் ரென்ஷா மற்றும் மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட 4 வீரர்கள் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ALSO READ: வீரராக ரோஹித் சர்மா! கேப்டனாக இளம் வீரர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வருகின்ற 2025 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய டி20 தொடர் மிக முக்கியமானது. இதனால்தான் ஆஸ்திரேலியா தற்போது முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இடம் பெற்றிருந்த அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் பிலிப்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நாதன் எல்லிஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஓவன், ஜோஷ் இங்கிலிஸ், மேட் ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டி20 அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஷான் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்ஹெமன், மிட்செல் ஓவன், பென் டுவார்ஷுயிஸ், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா

 

Related Stories
Rishabh Pant: குணமான காயம்! கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. எப்போது தெரியுமா?
Suryakumar Yadav: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!
ICC Women World Cup 2025: இந்திய அணி டாப்! சரிந்த ஆஸ்திரேலியா.. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் நிலைமை என்ன?
Vijay Hazare Trophy 2025: ரோஹித்- கோலிக்கு இறுதி எச்சரிக்கை.. உள்நாட்டு தொடரில் விளையாட கட்டாயப்படுத்தும் பிசிசிஐ?
IND W – PAK W: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. பக்கா பிளான் போட்டு வெற்றி கண்ட இந்திய அணி!
IND W – PAK W: சிறு தவறில் ரன் அவுட்டான பாகிஸ்தான் வீராங்கனை.. நாட் அவுட் என அம்பயருடன் வாதிட்ட கேப்டன்! வைரலாகும் வீடியோ!