Asia Cup’s Biggest Partnerships: ஆசியக் கோப்பையில் டாப் 6 அதிரடி பார்ட்னர்ஷிப்கள்.. விராட் கோலி – கே.எல். ராகுல் சாதனை!
Top 6 Highest Asia Cup Cricket Partnerships: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் மிகச் சிறந்த 6 பார்ட்னர்ஷிப்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. கோலி-ராகுல் (233 ரன்கள்), நசீர் ஜாம்ஷெட்-முகமது ஹபீஸ் (224 ரன்கள்) போன்ற ஜோடிகள் படைத்த சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன.

விராட் கோலி - கே.எல்.ராகுல்
கிரிக்கெட் போட்டியில் பார்ட்னர்ஷிப் என்பது எந்த ஒரு அணியின் வெற்றிக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கும். ஒரு அணியில் 2 பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்து ரன்களை விரட்டும்போது, ஸ்கோர்போர்டில் ரன்கள் சேர்ந்து எதிரணி அணியின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கடினமான சூழ்நிலைகளில் அணியைக் கையாள முடியும் மற்றும் பெரிய போட்டிகளில் வெற்றிக்கு அடித்தளமிடும். அதன்படி, ஆசிய கோப்பை (Asia Cup) போன்ற முக்கிய போட்டியில், அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற இதுபோன்ற பல பார்ட்னர்ஷிப்கள் இருந்தன. அதன்படி, ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் 6 பெரிய பார்ட்னர்ஷிப்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். இதில், இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket) வீரர்களும் பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.
ஆசிய கோப்பையில் 6 மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்கள்
விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் – 233 ரன்கள்
Highest partnership ever in Asia Cup history : 233* runs by KL Rahul & Virat Kohli against Pakistan, today.
They’ve also completed 1k runs as a pair in ODIs! pic.twitter.com/bxKNjd1ota
— Juman Sarma (@cool_rahulfan) September 11, 2023
ஆசிய கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி படைத்துள்ளது . கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது விக்கெட்டுக்கு ஒன்றிணைந்த கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 233 ரன்கள் சேர்த்தனர்.
ALSO READ: ஆசியக் கோப்பை டி20 அதிகபட்ச ஸ்கோர்கள்.. டாப் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான்..!
நசீர் ஜாம்ஷெட் மற்றும் முகமது ஹபீஸ் – 224 ரன்கள்
ஆசிய கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் நசீர் ஜாம்ஷெட் மற்றும் முகமது ஹபீஸ் 2வது இடத்தில் உள்ளனர் . கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடியாக களமிறங்கிய நசீர் ஜாம்ஷெட் மற்றும் முகமது ஹபீஸ் 224 ரன்கள் சேர்த்திருந்தனர் .
யூனிஸ் கான் மற்றும் சோயிப் மாலிக் – 223 ரன்கள்
ஆசிய கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் யூனிஸ் கான் மற்றும் சோயிப் மாலிக் 3வது இடத்தில் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிராக யூனிஸ் கான் மற்றும் சோயிப் மாலிக் 3வது விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்தனர் .
இப்திகார் அகமது மற்றும் பாபர் அசாம் – 214 ரன்கள்
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்களான இப்திகார் அகமது மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன . கடந்த 2023ம் ஆண்டு நேபாளத்திற்கு எதிராக பாபர் மற்றும் இப்திகார் 5வது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சேர்த்தனர் .
அஜிங்க்யா ரஹானே மற்றும் விராட் கோலி – 213 ரன்கள்
இந்திய பேட்ஸ்மேன்கள் அஜிங்க்யா ரஹானே மற்றும் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளனர். 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக ரஹானே மற்றும் கோலி மூன்றாவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தனர்.
ALSO READ: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!
ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் – 210 ரன்கள்
இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆறாவது இடத்தில் உள்ளனர் . 2018ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடக்க ஜோடியாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்திருந்தனர் .